Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசமாக சொதப்பிய மும்பை.. அதிர வைத்த அமித் மிஸ்ரா.. 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

சென்னை: மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி நிதானமாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.

2021 ஐபிஎல் போட்டிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லிக்கு மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தது.டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை டாஸ் வென்றது.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 20 ஓவருக்கு 137/9 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மும்பையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது.

டெல்லி

டெல்லி

முன்னதாக பஞ்சாப் அணியை டெல்லி எளிதாக வீழ்த்தியது. டெல்லி அணியிடம் நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது. ஆனால் மும்பை அணியிடம் பேட்டிங், பவுலிங் இரண்டும் வலுவாக உள்ளது. அதேபோல் சென்னை பிட்சில் டெல்லி அணி முதல்முறையாக இன்று களமிறங்குகிறது.

பிட்ச்

பிட்ச்

சென்னை பிட்சில் ஏற்கனவே மும்பை இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் மும்பைக்கு சூழ்நிலை கொஞ்சம் சாதகமாக உள்ளது. சென்னையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கஷ்டம் என்பதால் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்று ஆடும் டெல்லி அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மும்பை

மும்பை

இன்று மும்பை அணியில் ரோஹித் சர்மா, டி காக், சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருணால் பாண்டியா, பும்ரா, போல்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர் ஆகியோர் ஆடுகிறார்கள். கடந்த போட்டியில் மும்பை அணியில் ஆடிய ராகுல் சாஹர் இன்று ஆடவில்லை.

டெல்லி

டெல்லி

இன்று ஆடும் டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, தவான். ஸ்மித், பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், லலித் யாதவ், அஸ்வின், ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான் ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். ஒரு பக்கம் டி காக் அவுட் ஆனாலும் இன்னொரு பக்கம் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடினார். ஆனால் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்ய குமார் அவுட் ஆனார். பின்னர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா அவுட்டானார். இதையடுத்து மும்பை வீரர்கள் வரிசையாக அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

மோசம்

மோசம்

மும்பை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா 0, குர்ணால் பாண்டியா 1, பொல்லார்ட் 2 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் மும்பை அணி டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ஓவருக்கு 137/9 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லிக்கு மும்பை அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

நிதானம்

நிதானம்

இதையடுத்து களமிறங்கிய டெல்லி நிதானமாக ஆடியது. முதல் ஓவரில் இருந்து பெரிதாக அடித்து ஆடி விக்கெட்டுகளை இழக்காமல் டெல்லி நிதானம் காட்டியது. பனியும் ஒத்துழைத்ததால் டெல்லி அணி நிதானமாக 6 ஸ்டிரைக் ரேட்டிலேயே ஆடியது. தவான் 45, ஸ்மித் 33 ரன்கள் எடுத்தனர்.

சிறப்பு

சிறப்பு

அதிரடியாக ஆடினால் விக்கெட்டை இழப்போம் என்பதை உணர்ந்து கொண்டு கூலாக டெல்லி அணி ஆடியது. இதனால் எப்போதும் சேப்பாக்கத்தில் மும்பை அணியின் பவுலர்கள் காட்டும் மேஜிக் இன்று வேலை செய்யவில்லை. இதையடுத்து டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மும்பையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது.

Story first published: Tuesday, April 20, 2021, 23:31 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+