Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்சன் கிட்டயும் இப்படித்தான் நடந்தது.. தமிழக வீரருக்கு "நோ" சொன்ன தோனி? கொஞ்சம்கூட நியாயமே இல்லை!

சென்னை: சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் இணையை மாற்றும் எண்ணம் கேப்டன் தோனிக்கு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

டெல்லிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அதன்பின் பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அணி எளிதாக வெற்றிபெற்றது.

சிஎஸ்கே அணியில் முக்கியமாக கடந்த போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்தது. சாஹர் மீண்டும் பார்மிற்கு திரும்பியதால் பஞ்சாப்பை எளிதாக சுருட்ட முடிந்தது.

அனுபவம்

அனுபவம்

சிஎஸ்கே அணியில் கடந்த இரண்டு போட்டிகளாக ஓப்பனிங் மட்டும் மோசமாக சொதப்பி வருகிறது. முக்கியமாக இளம் வீரர் ருத்துராஜ் சரியான பார்மில் இல்லை. முதல் போட்டியிலும் சரி, இரண்டாவது போட்டியிலும் சரி, பந்துகளை குடுத்துவிட்டு வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ருத்துராஜ் சொதப்பினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆனால் இவர் மோசமான பார்மில் இருந்தும் கூட, சிஎஸ்கே அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறார்கள். இவரை அணியில் இருந்து நீக்கும் எண்ணம் சிஎஸ்கேவிற்கு இல்லையாம். இது தொடர்பாக தோனி உறுதியாக இருக்கிறார். ருத்துராஜூக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும், அணியை மாற்ற கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார்.

பிடிவாதம்

பிடிவாதம்

பிளமிங்கும் இதில் உறுதியாக உள்ளார். ருத்துராஜ் மீது நாங்கள் கடந்த வருடம் நம்பிக்கை வைத்தோம். இந்த வருடமும் நம்பிக்கை வைப்போம். அவருக்கு ஆதரவாக இருப்போம். அவரை அணியில் எடுத்ததே அவரை ஆதரிக்கத்தான். கண்டிப்பாக எங்களின் சப்போர்ட் தொடரும் என்று பிளமிங் பேசி உள்ளார். இதனால் ருத்துராஜ் நீக்கப்படாமல் தொடர்ந்து அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மறுப்பு

மறுப்பு

கடந்த வருடமும் இப்படித்தான் சரியாக ஆடாத ஓப்பனிங் வீரர் வாட்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. பார்மில் இல்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இந்த முறையும் தோனி பார்மில் இல்லாத வீரருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார். இதனால் தமிழக வீரருக்கு இந்த சீசனிலும் தோனி நோ சொல்லி இருக்கிறார்.

சிக்கல்

சிக்கல்

தமிழக ஓப்பனர் ஜெகதீசனுக்கு கடந்த சீசனில் 3 போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் அது கூட கிடைக்காது. பேக் அப் ஒப்பனராக உத்தப்பா இருப்பதால் கண்டிப்பாக ஜெகதீசனுக்கு இந்த முறையும் தோனி நோ சொல்லி, பெஞ்சில்தான் உட்காரா வைக்க போகிறார் என்கிறார்கள். தொடர்ந்து பல வருடங்களாக சிஎஸ்கே அணியில் திறமையான ஜெகதீசன் புறக்கணிக்கப்படுவது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Story first published: Sunday, April 18, 2021, 11:25 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+