For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புறக்கணிப்பா? தொடர்ந்து 2 போட்டிகளில் ஆடாத நடராஜன்.. வார்னரின் திடீர் முடிவு.. என்ன காரணம்?

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.

Recommended Video

Natarajan, Kane Williamson வரணும் ! Punjabக்கு எதிராக SRH Changes செய்யலாம் | OneIndia Tamil

பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது.

இன்று ஆடும் ஹைதராபாத் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மணீஷ் பாண்டே, சமத், நபி போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு வில்லியம்சன், கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர்.

நடராஜன்

நடராஜன்

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. நடராஜன் கடந்த போட்டியிலும் ஹைதராபாத் அணிக்காக ஆடவில்லை. இவருக்கு பதிலாக கலீல் அகமது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

கலீல்

கலீல்

கடந்த போட்டியில் நடராஜனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்தது. அவர் தொடர்ந்து நிறைய போட்டிகளில் ஆடுகிறார். இதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அணியில் இடமளிக்கப்படவில்லை என்று தகவல்கள் வந்தது.

காயம்

காயம்

இந்த நிலையில்தான் அவரின் காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான லட்சுமணன் தெரிவித்தார். நடராஜன் காலில் ஏற்பட்ட சின்ன காயம்தான் அவரை களமிறக்காமல் போக காரணம். அவருக்கு இன்னும் சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

புறக்கணிப்பு இல்லை

புறக்கணிப்பு இல்லை

மற்றபடி இவரை அணி நிர்வாகம் புறக்கணிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முழுமையாக காயம் குணமடைந்த பின்புதான் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடராஜன் இன்னும் 2-3 போட்டிகள் ஆட முடியாமல் போக வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, April 21, 2021, 16:23 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
IPL 2021: Natarajan not playing for SRH in today match also against Punjab.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+