Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இவரும் திரும்பி வந்துட்டாரு.. வரிசையாக லைன் கட்டி நிற்கும் படை.. யார்க்கர் நட்டு சுதாரிக்கணும்!

சென்னை; 2021 ஐபிஎல் தொடரில் இளம் பவுலர்கள் பலர் சிறப்பாக பந்து வீசுவதால் நடராஜன் தனது ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் கலக்கியதன் மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆன தமிழக வீரர் நடராஜன். ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன் அந்த சீசனில் 69 யார்க்கார்களை வீசினார்.

ஐபிஎல் சீசன் முழுக்கவே இவர் நன்றாக பவுலிங் செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனவர் , அந்த தொடரிலும் கலக்கி பின் இங்கிலாந்து தொடரிலும் ஆடும் வாய்ப்பை பெற்றார்.

சிறப்பு

சிறப்பு

தற்போது இந்திய அணியில் உலகக் கோப்பை டி 20 அணியில் ஆட வேண்டும் என்று நடராஜன் முயன்று வருகிறார். ஐபிஎல் தொடரில் மீண்டும் ஹைதராபாத் அணியில் ஆடி வருகிறார். 2021 ஐபிஎல் தொடரில் இளம் பவுலர்கள் பலர் சிறப்பாக பந்து வீசுவதால் நடராஜன் தனது ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

எப்படி

எப்படி

இந்த தொடரில் பல புதிய வீரர்கள் சிறப்பாக ஆட தொடங்கி உள்ளனர். கொல்கத்தா அணியில் ஆடும் பிரஷித் கிருஷ்ணா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இவர் நன்றாக பவுலிங் செய்தார். அதேபோல் நேற்று சக்காரியா நன்றாக பவுலிங் செய்தார். இவர் ராஜஸ்தான் அணியில் ஆடி வருகிறார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணியின் சேட்டன் சக்காரியா நேற்று அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட் எடுத்து, 7 ரன் ரேட் வைத்து இருந்தார். ஸ்லோ பால் யார்க்கர் முதல் பவுன்சர் வரை துல்லியமாக வீசினார். அதேபோல் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக டெத் ஓவர்களில் பவுலிங் செய்தார். இளம் இந்திய பவுலர்கள் பலர் சிறப்பாக வீசுகிறார்கள்.

வேறு யார்

வேறு யார்

இதுபோக ஐபிஎல்லில் பும்ராவும் பார்மிற்கு வந்துவிட்டார். பாண்டியாவும் பவுலிங் போட உள்ளார். நேற்று ஷமியும் பஞ்சாப் அணிக்காக மிக சிறப்பாக பவுலிங் செய்தார். நடராஜனுக்கு போட்டியாக நிறைய பவுலர்கள் வந்துவிட்டனர்.

கட்டாயம்

கட்டாயம்

இதனால் நடராஜன் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்திய அணியில் டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆட வேண்டும் என்றால் இன்னும் சிறப்பாக அவர் ஆட வேண்டும். எந்த தவறுக்கும் இடம் கொடுக்காமல் தொடர்ந்து துல்லியமாக நடராஜன் பவுலிங் செய்ய வேண்டும்.

Story first published: Tuesday, April 13, 2021, 14:39 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+