
நடராஜன்
இன்று நடராஜன் போட்ட முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். 11 ரன்களை இவர் கொடுத்து இருந்தாலும் கூட பவுலிங் சிறப்பாகவே இருந்தது. இவரின் ஓவரில் நிறைய வெரைட்டி இருந்தது. யார்க்கர் மட்டும் போடாமல் மாற்றி மாற்றி பவுலிங் செய்தார்.

மாற்றினார்
ஸ்லோ பால், கட்டர், ஷார்ட் பால் என்று மாற்றி மாற்றி போட்டார். லென்தை மாற்றி, ஒவ்வொரு பந்திலும் வெரைட்டி காட்டினார். முன்பு இருந்ததை விட நடராஜன் தற்போது புதிதாக நிறைய வேரியேஷன்களை தனது பவுலிங்கில் கற்றுக்கொண்டு இருக்கிறார்.

யார்க்கர்
அவர் வீசிய முதல் ஓவரில் ஒரே ஒரு யார்க்கர் மட்டுமே வீசினார். நடராஜன் தன்னுடைய பலமான யார்க்கர் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற பவுலிங் முறைகளிலும் கவனம் செலுத்தி உள்ளார். இது கொஞ்சம் பெரிய ரிஸ்க். ஆனால், நடராஜனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால், அவரின் வேரியேஷன்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கை கொடுக்கும்.

சர்வதேச போட்டி
இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரிதான் நடராஜனை புதிய வேரியேஷனோடு வீசும்படி கூறினார். தற்போது நடராஜனை அதை முறையாக செய்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் கண்டிப்பாக நடராஜனுக்கு இந்த வேரியேஷன்கள் கை கொடுக்கும்.

சிறப்பு
இன்று நடராஜன் வீசிய 12வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர் முழுக்க வேரியேஷன் காட்டினார். பெங்களூர் அணி அதிரடி காட்டி வந்த நிலையில் ரன் செல்வதை நடராஜனை 12வது கட்டுப்படுத்தி பெங்களூர் அணிக்கு பிரஷர் ஏற்றினார்.


Click it and Unblock the Notifications