Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"திடீர்ன்னு குறைந்தது".. யார்க்கர் கிங் நடராஜனா இப்படி? என்னாச்சு.. பின்னணியில் எதுவும் பிளானா?

சென்னை: ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக வீரர் நடராஜனின் பவுலிங்கில் திடீரென மாற்றம் ஏற்பட்டு இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

தமிழக வீரர் நடராஜன் ஹைதரப்பாத் அணியில் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். கடந்த சீசனில் மிகவும் சிறப்பாக ஆடிய நடராஜன், இந்த முறையும் நன்றாக பவுலிங் செய்து வருகிறார்.

இதுவரை இரண்டு போட்டிகளில் நடராஜன் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சராசரியாக 8 ரன்களை நடராஜன் கொடுத்து வருகிறார். சக ஹைதராபாத் வீரர்களும் கிட்டத்தட்ட இதேபோல்தான் பவுலிங் செய்து வருகிறார்கள்.

நடராஜன் எப்படி

நடராஜன் எப்படி

பொதுவாக நடராஜன் 135 கிமீ வேகத்திற்கு அதிகமாக பவுலிங் செய்யும் திறன் கொண்டவர். சமயங்களில் 142 கிமீ வேகம் வரை கூட நடராஜன் தொடுவார்.அதேபோல் துல்லியமான யார்க்கர்களை கடைசி ஓவரில் வீசும் திறன் கொண்டவர் நடராஜன். தற்போது நடராஜனின் பவுலிங் ஸ்டைலில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

நடராஜன் தனது பவுலிங் வேகத்தை வெகுவாக குறைத்துள்ளார். 135+ கிமீ வேகத்தில் வீசி வந்த நடராஜன் தற்போது அப்படியே மாறி, தனது வேகத்தை 120+ கிமீ ஆக மாற்றியுள்ளார். நேற்று போட்டியில் நடராஜன் நிறைய ஸ்லோ பந்துகளை வீசினார்.

கட்டர்

கட்டர்

முன்பெல்லாம் நடராஜன் விக்கெட் எடுக்க குறி வைப்பார். ஆனால் தற்போது அதிக கட்டர்களை வீசுகிறார். இதன் அர்த்தம், விக்கெட் எடுப்பதை விட ரன் செல்வதை தடுப்பதே இவரின் குறிக்கோள் என்பதாகும். ஹைதராபாத் அணியும் இவரை அப்படியே பயன்படுத்துகிறது. வார்னர் இவரை கட்டர் வீசும் படியே கூறுகிறார்.

காரணம்

காரணம்

ஒருவேளை இதனால்தானோ என்னவோ நடராஜன் மொத்தமாக தனது பவுலிங் வேகத்தை குறைத்துள்ளார். இது ஒருவகையில் ரன் செல்வதை கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் இதில் பெரிதாக விக்கெட்டுகள் எதுவும் விழுவது இல்லை. விக்கெட்டுகள் எடுக்காமல் ரன் செல்வதை மட்டுமே நடராஜன் இப்போது கட்டுப்படுத்துகிறார்.

வார்னர்

வார்னர்

வார்னர் கொடுத்த ஐடியா காரணமாக ஒருவேளை நடராஜன் இப்படி மாறி இருக்கலாம். ஆனால் இனி வரும் போட்டிகளில் நடராஜன் அதிக விக்கெட் எடுக்க வேண்டும். இந்திய அணியில் டி 20 உழைக்க கோப்பையில் இடம்பெற வேண்டும் என்றால் நடராஜன் அதிக விக்கெட்டுகளை இனி வரும் போட்டிகளில் வீழ்த்த வேண்டும்.

Story first published: Thursday, April 15, 2021, 17:49 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+