Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மும்பை, ஐதராபாத் அணிகள் தப்பித்தது.. வீரர்களின் பங்கேற்பு உறுதி

மும்பை: ஐபிஎல் தொடரில் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நிலவிவந்த நிலையில் மகிழ்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மீதம் 31 போட்டிகள் நடைபெறவேண்டியுள்ளன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.

நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு தயாராகும் நோக்கில் அயல்நாட்டு அணிகள் சர்வதேச தொடர்களை ஏற்பாடு செய்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தங்களது வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. இதே போல வங்கதேச வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மீதமுள்ள நாடுகளுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

சூப்பர் அறிவிப்பு

சூப்பர் அறிவிப்பு

இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு மகிழ்ச்சி செய்து ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணியை சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வருவதாக தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடரின் போது நியூசிலாந்து - பாகிஸ்தான் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வருவார்கள் எனக்கூறப்படுகிறது.

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்தை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பெரும் பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக கேன் வில்லியம்சன், ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதே போல மும்பை அணிக்கு ட்ரெண்ட் போல்ட்டும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கெயில் ஜேமிசன் ஆகியோர் முக்கிய வீரர்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 25, 2021, 19:53 [IST]
Other articles published on Jun 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+