Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்க்கையை முடக்கி போட்ட "அந்த" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்.. இதுதான் பேட்டிங்!

சென்னை: ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து உள்ளார்.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஹைதராபாத் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

ஆனால் கொல்கத்தா அணியோ டாஸ் தோல்வி அடைந்தாலும் கூட கவலையே இன்றி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வருகிறது. பவர் பிளேவிலேயே ஹைதராபாத் மீது கொல்கத்தா அணி கடுமையாக அழுத்தம் கொடுத்தது.

எப்படி

எப்படி

இன்று கொல்கத்தா அணிக்காக நிதிஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் ஓப்பனிங் இறங்கினார்கள். இதற்கு முன்பெல்லாம் சுனில் நரேன், ராகுல் திரிப்பாதி போன்றவர்களை கொல்கத்தா அணி ஓப்பனிங் இறக்கி டெஸ்ட் செய்தது. ஆனால் இன்று நிதிஷ் ராணா கொல்கத்தா அணி மூலம் ஓப்பனிங் இறக்கப்பட்டார்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ராணாவுடன் ஓப்பனிங் இறங்கிய கில் நிதானமாக ஆடி வந்தாலும் இன்னொரு பக்கம் ராணா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். பவர் பிளேவில் 2க்கும் அதிகமான பீல்டர்கள் வெளியே இல்லாததை பயன்படுத்தி நிதிஷ் ராணா வெளுத்து வாங்கினார். புவேனஸ்வர் குமார் தொடங்கி சந்தீப் சர்மா வரை எல்லோரின் ஓவரில் ராணா மாஸ் காட்டினார்.

ஒன் டவுன்

ஒன் டவுன்

இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக ஓப்பனிங் இறங்கிய ராணா சில போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடி இருக்கிறார். ஆனால் இன்று ஓப்பனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதை பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக இவரின் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடந்தன. போன மாதம்தான் இவருக்கு கொரோனா ஏற்பட்டது.

பயிற்சி

பயிற்சி

ஒரு மாதமாக பயிற்சி எடுக்காமல் இவர் மருத்துவமனையிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மீண்டும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் வெறும் 2 நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்துவிட்டு இன்று பேட்டிங் செய்ய ராணா வந்தார். ஆனால் பயிற்சி இல்லாமலே ராணா இன்று சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சிறப்பு

சிறப்பு

இன்று ஓப்பனிங் இறங்கிய ராணா வெறும் 37 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் ஆடி வருகிறார். இதுவரை ராணா அவுட் ஆகாமல் 2 சிக்ஸ், 8 பவுண்டரி என்று விளாசிக்கொண்டு இருக்கிறார். கண்டிப்பாக இன்றைய ஆட்டம் அவரின் வாழ்நாளில் மிக முக்கியமான ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, April 11, 2021, 20:29 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+