யாருமே டீமில் இல்லை.. ஆனாலும் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? பண்ட் உடைத்த ரகசியம்.. ப்பா செம பிளான்
சென்னை: நேற்று சென்னைக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் வென்றது எப்படி என்று டெல்லி அணியின் கேப்டன் பண்ட் விளக்கி உள்ளது.
நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பவுலிங் சொதப்பிய காரணத்தால், டெல்லியிடம் வீழ்ந்தது.
நேற்று முதலில் சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே 188 ரன்கள் எடுத்தது. 18.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து டெல்லி எளிதாக வெற்றி பெற்றது

இல்லை
நேற்று டெல்லி அணியில் முக்கியமான பல வீரர்கள் இடம்பெறவில்லை. ரபாடா அணியில் இல்லை. நோட்ஜ் அணியில் இல்லை. அதேபோல் அக்சர் பட்டேல் கொரோனா காரணமாக இடம்பெறவில்லை. ஆனாலும் டெல்லி அணியின் பவுலிங் சிஎஸ்கே அணியின் பவுலிங்கை விட சிறப்பாகவே இருந்தது.

எப்படி?
முக்கிய பவுலர்கள் இல்லாமலே சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி என்று பண்ட் விளக்கி உள்ளார். நேற்று பேசிய பண்ட், எங்கள் அணியில் முக்கியமான பவுலர்கள் இல்லை. இதனால் இருக்கிற வீரர்களை வைத்து எப்படி ஆடலாம் என்று யோசித்தேன். அணியில் இருக்கும் வீரர்களை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.

பேட்டி
நாங்கள் வேறு எதையும் பற்றி யோசிக்கவில்லை. நேற்று முக்கிய பவுலர்கள் இல்லாத குறையை அவேஷ், டாம் கரன் போக்கினார்கள். மிடில் ஓவர்களில் இவர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். இதுதான் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

இதுதான் காரணம்
மிடில் ஓவர்களில் நாங்கள் கொஞ்சம் கட்டுப்படுத்திய காரணத்தால் சென்னையை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. முடிந்த அளவு ரன் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது. நாங்கள் ரன் ரேட்டுக்காக நேற்று ஆடவில்லை.

தோனி
ஒரு போட்டியில் கடைசியில் கண்டிப்பாக மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்தான். தோனியிடம் நான் நிறைய கற்று இருக்கிறேன். அவர் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இந்த ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது, என்று பண்ட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications