Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு அந்த ஒரு பிரச்னையும் தீர்ந்தது...இனி சென்னையிலும் தூள்கிளப்பும்... ஜாகீர் பக்கா ஸ்கெட்ச்

மும்பை: ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஒரே ஒரு பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது என்றும் இனி அனல் பறக்கும் என பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் மும்பை அணியில் இருந்த ஸ்பின்னர் பிரச்னை ஒரு வழியாக தீர்ந்துவிட்டதாக பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மும்பை அணி

மும்பை அணி

ஐபிஎல்-ல் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையிலானா இந்த அணி வழக்கமாக முதலில் சொதப்பிவிட்டு பின்னர் சிறப்பாக ஆடும் என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் கடந்த சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதே போல இந்தாண்டும் தொடக்கம் முதலே வெற்றி முகம்காண வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

சிக்கல்

சிக்கல்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி சிறப்பாக ஆடிய போதும் அந்த அணிக்கு மிகப்பெரும் சிக்கலாக பார்க்கப்பட்டது ஸ்பின்னிங் பகுதிதான். அந்த அணியில் க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார் என இளம் ஸ்பின்னர்களே இருந்த நிலையில் ஆட்டத்தை மாற்றும் அளவுக்கான பெரிய அனுபவம் கொண்ட ஸ்பின்னர் இல்லை. இந்தாண்டு மும்பை அணி தனது முதல் 9 போட்டிகளை சென்னை மற்றும் டெல்லியில் ஆடுகிறது. இவை இரண்டும் ஸ்பின்னர்களுக்கு சற்று சாதகமானவை ஆகும். எனவே இது மும்பைக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

பார்த்தீவ்

பார்த்தீவ்

இதுகுறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், சென்னை மற்றும் டெல்லி களம் மும்பை அணிக்கு சவாலாக இருக்காது. ஏனென்றால் இந்தாண்டு அனுபவம் வாய்ந்த பியூஸ் சாவ்லா அணிக்குள் எடுக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை களத்தில் எப்படி வீச வேண்டும் என நன்கு அறிந்தவர். எனவே மும்பை அணி அனைத்து பகுதிகளையும் சரி செய்துவிட்டது. நடப்பு சாம்பியனாக இருந்த போதும் அடுத்த சீசனுக்காக அணியில் என்ன பிழை என்று பார்த்து சரி செய்துள்ளது மும்பை அணி. இதுவே அந்த அணியின் சிறப்பு என தெரிவித்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

பியூஸ் சாவ்லா குறித்து பேசியிருந்த மும்பை அணியின் முக்கிய நிர்வாகி ஜாகீர்கான், பியூஸ் சாவ்லா உலகக்கோப்பை போன்ற கடினமாக சூழ்நிலைகளில் ஆடியவர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பந்துவீசுவது ஸ்பின்னர்களுக்கு கடினமான ஒன்று. ஆனால் பியூஸ் சாவ்லா அதனை அற்புதமாக செய்யக்கூடியவர். அதன் காரணமாகவே ஏலத்தில் எங்கள் பார்வையை பியூஸ் சாவ்லா பக்கம் திருப்பினோம் என தெரிவித்தார்.

 புள்ளி விவரம்

புள்ளி விவரம்

ஐபிஎல்-ல் இதுவரை கொல்கத்தா, பஞ்சாப், சென்னை அணிகளுக்காக ஆடியுள்ள பியூஸ் சாவ்லா இந்தாண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். இவரை 2.4 கோடி ரூபாய்க்கு அந்த அணி ஏலம் எடுத்தது. 163 இன்னிங்ஸ்களில் பந்துவீசியுள்ள பியூஸ் சாவ்லா, 156 விக்கெட்களை எடுத்துள்ளார். அவரின் சிறந்த பந்துவீச்சு 17 விக்கெட்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்ததே ஆகும்.

Story first published: Wednesday, March 17, 2021, 18:04 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+