For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, ரோஹித் சர்மாவை விட இவருக்கு சம்பளம் அதிகம்.. ஐபிஎல்-இல் வியக்க வைக்கும் ஆஸி. வீரர்!

மும்பை : தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் தொடரில் தோனி, ரோஹித் சர்மாவை விட அதிக சம்பளம் வாங்க இருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்.

அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை தக்க வைத்து ஆச்சரியம் அளித்துள்ளது.

இந்த நிலையில், அவரது சம்பளம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோனி, ரோஹித் சர்மாவை விட அதிகமாக உள்ளது.

ஏலம்

ஏலம்

2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பாட் கம்மின்ஸ் பங்கேற்றார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டி போட்டு ஏலத்தில் வாங்கியது. பல அணிகளும் அவரை வாங்க போட்டி போட்டதால் அவரது விலை 15.5 கோடி வரை சென்றது.

நீக்கமா?

நீக்கமா?

அத்தனை பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் 2020 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 12 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். அவரது செயல்பாடு விமர்சனத்தை சந்தித்தது. இந்த நிலையில், அவரது சம்பளமும் அதிகம் என்பதால் கொல்கத்தா அணி அவரை விடுவிக்கும் என்றே பலரும் எண்ணினர்.

சம்பளம்

சம்பளம்

ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவரை அணியில் தக்க வைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அவர் அதே 15.5 கோடி சம்பளத்தையும் இதன் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இது தற்போது ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் வாங்கும் இரண்டாவது அதிகபட்ச சம்பளம் ஆகும்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

விராட் கோலி 17 கோடி சம்பளம் வாங்குகிறார். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் பாட் கம்மின்ஸ். தோனி ரோஹித் சர்மா 15 கோடி மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முந்தி இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

Story first published: Sunday, January 24, 2021, 19:13 [IST]
Other articles published on Jan 24, 2021
English summary
IPL 2021 : Pat Cummins to earn more than Dhoni and Rohit Sharma in IPL for second year in a row.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+