Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘சபாஷ் சரியான போட்டி’ இரு அணிகளையும் சோதிக்கும் வகையில் பிட்ச்.. டாஸ் வெல்லும் அணி என்ன செய்யும்?

அமீரகம்: சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் பிட்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் இன்று தொடங்கவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கவிருக்கும் இந்த தொடர், வரும் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சிஎஸ்கே மும்பை போட்டி

சிஎஸ்கே மும்பை போட்டி

இந்த தொடரின் முதல் போட்டியாக தோனியின் தலைமையிலான சென்னை அணியையும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியையும் மோதவிட்டு பிசிசிஐ விருந்து வைத்துள்ளது. இந்த சீசனின் முதல் பாதியில் இரு அணிகளும் ஏற்கனவே மோதியுள்ளது. அதில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. எனவே 2வது போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிட்ச் தகவல்கள்

பிட்ச் தகவல்கள்

இந்நிலை இரு அணிகளும் மோதும் பிட்ச் ரிப்போர்ட் தெரியவந்துள்ளது. போட்டி நடைபெறும் துபாய் மைதானம் ஓரளவிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் நடுநிலையாக இருக்கக்கூடியது. இங்கு பிட்ச் சற்று மெதுவாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து நின்று வரும். எனவே ரன்கள் அதிகமாக போவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் துபாய் மைதானத்தின் பவுண்டரி தூரங்கள் பெரிதாக இருக்கும் என்பதால் பவுண்டரிகள் குறைவாகலாம்.

சராசரி ஸ்கோர்

சராசரி ஸ்கோர்

இந்த மைதானத்தில் சராசரியாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 158 ரன்களை குவிக்கலாம். ஐபிஎல்-ஐ பொறுத்தவரை 144 ரன்கள் குவிக்கலாம். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து குறைந்த ஸ்கோருக்குள் எதிரணியை சுருட்ட வாய்ப்புள்ளது.

 புள்ளி விவரம்

புள்ளி விவரம்

துபாய் மைதானத்தில் இதுவரை 93 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 38 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 54 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோர் 219/2 ஆகும். குறைந்தபட்ச ஸ்கோர் 59 ஆகும். இங்கு 203 ரன்கள் வரை அதிகபட்சமாக அணிகள் வெற்றிகரமாக துரத்தியுள்ளன.

Story first published: Sunday, September 19, 2021, 19:07 [IST]
Other articles published on Sep 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+