Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளேயர்ஸ் ஒன்னும் முட்டாள் இல்ல.. நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர்.. முன்னாள் வீரர் காட்டம்!

மும்பை: ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் முன்னாள் வீரர் ஒருவர் பிசிசிஐ மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது.

ஹுசைன் கருத்து

ஹுசைன் கருத்து

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ஐபிஎல் தொடரை நிறுத்துவதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. சில அணிகளில் பயோபபுள் விதிமுறைகள் மீறப்பட்டுவிட்டன. தற்போது இருக்கும் நிலைமை கிரிக்கெட்டை விட மிக மிக முக்கியமானது. வீரர்கள் இந்தியாவில் கொரோனா நிலைமையை நன்கு பார்த்து வருகின்றனர். அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

சிரமம்

சிரமம்

இந்திய மக்கள் மருத்துவமனை படுக்கைகளுக்காகவும், ஆக்சிஜனுக்காகவும் திண்டாடுவதை தொலைக்காட்சிகளில் வீரர்கள் பார்த்து வருகின்றனர். மைதானத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக இருப்பதை பார்த்திருப்பார்கள். எனவே தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமா என சிந்தித்திருப்பார்கள், சிரமப்பட்டிருப்பார்கள்.

தவறு

தவறு

கடந்த முறை ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அப்போது அங்கு குறைவான பாதிப்பு தான் இருந்தது. எந்த பயோ பபுள் விதிமுறை மீறல்களும் இல்லை. அதனால் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த முறை இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது தவறான முடிவு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலைகளில் உயிரிழந்து வருகிறார்கள். ஆனால் அந்த சூழலில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இதற்காக நான் வீரர்களை குறைக்கூறவில்லை. போட்டி முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்னும் 31 லீக் போட்டிகள் தடைபட்டுள்ளன. இவை டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நவம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

Story first published: Wednesday, May 5, 2021, 15:09 [IST]
Other articles published on May 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+