நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்கே.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்
சென்னை: டெல்லி அணிக்கு எதிராக ஆடும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் விவரம் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த வருட ஐபிஎல் சீசனில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை அணி இந்த முறை புதிய மாற்றங்களுடன் களமிறங்கி உள்ளது.
மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ராபின் போன்ற புதிய வீரர்கள் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர். டெல்லி அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை
இன்று ஆடும் சென்னை அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களாக பிராவோ, சாம் கரண், மொயின் அலி, டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்குகிறார். சென்னை அணியின் வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர்கள். இதில் மூன்று பேர் ஆல் ரவுண்டர்கள்.

யார்
சென்னை அணியில் ராபின் உத்தப்பா ஓப்பனிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பதி ராயுடு மீது நம்பிக்கை வைத்து தோனி அவரை மீண்டும் இறக்கி உள்ளார்.

பிராவோ
அதேபோல் கடந்த வருடம் சரியாக ஆடாத பிராவோ மீது நம்பிக்கை வைத்து அவரை தோனி களமிறக்கி உள்ளார். பவுலர்களில் சாகர், ஷரத்துல் தாக்கூர் இறங்கி உள்ளனர். அதேபோல் ரெய்னா ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். ரெய்னா, ராயுடு, பிராவோ ஆகிய 3 மூத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தோனி இறக்கி உள்ளார்.

சென்னை அணி
இன்று ஆடும் சென்னை அணியில் ரூத்துராஜ், அம்பதி ராயுடு, டு பிளசிஸ், ரெய்னா, எம் எஸ் தோனி, மொயின் அலி, ஜடேஜா, சாம் கரண், பிராவோ, தாக்கூர், சாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications