உள்ளே 3 பேர்.. மொத்தமாக மாறும் சிஎஸ்கே அணி.. இன்று ஆட போகும் 11 வீரர்கள் யார்? - தோனி ராஜதந்திரம்
சென்னை: டெல்லிக்கு எதிராக இன்று களமிறங்கும் சென்னை அணியில் இடம்பெற உள்ள வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடக்கிறது. கடந்த முறை டெல்லிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனால் இந்த முறை டெல்லிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இன்று டெல்லி அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் செயல்படுவார்.

பண்ட்
இன்று சென்னை அணியில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் கடைசி மூன்று போட்டிகளில் ரூத்துராஜ் சிறப்பாக ஆடினார். இதனால் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

வாய்ப்பு
இன்று அவர்தான் ஓப்பனிங் இறங்குவார். அதேபோல் வெளிநாட்டு வீரர்களில் டு பிளசிஸ், சாம் கரன், மொயின் அலி கண்டிப்பாக களமிறங்குவார்கள். இவர்கள் போக தாஹிர் அல்லது மிட்சல் சான்டர் இருவரில் ஒருவர் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது.

பாஸ்ட் பவுலர்கள்
பாஸ்ட் பவுலர்கள் என்று பார்த்தால் இந்தியாவின் சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்குவார்கள். அதேபோல் ஓப்பனிங்கில் உத்தப்பா, ஒன் டவுன் ரெய்னா இறங்குவார் என்கிறார்கள். கடந்த சீசனில் சிஎஸ்கேவில் ஆடாத ரெய்னா, உத்தப்பா, மொயின் அலி ஆகிய மூன்று பேர் இந்த சீசனில் அணிக்குள் வருகிறார்கள்.

ஆடும் அணி
இதனால் இன்று டெல்லிக்கு எதிராக ஆடும் அணியில் உத்தப்பா, ரூத்துராஜ், ரெய்னா, டு பிளசிஸ், தோனி, சாம் கரண், ஜடேஜா, மொயின் அலி, சாகர், ஷரத்துல், தாஹிர் (சான்ட்னர்) ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications