2 முக்கிய வீரர்கள் ஆடுவது சந்தேகம்.. சிஎஸ்கேவில் பெரிய மாற்றம்.. இன்று ஆட போகும் பிளேயிங் 11 விவரம்!
சென்னை: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று ஆட உள்ள சிஎஸ்கே வீரர்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
சென்னைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற உள்ளது. டெல்லியில் சிஎஸ்கே அணி முதல் முறையாக இன்று ஆட உள்ளது.
இதுவரை சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஆடி, முதல் போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து பின் வரிசையாக 4 போட்டிகளில் வென்றது.

வெற்றி
சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் வலிமையாக உள்ளது. ஆல் ரவுண்டர் எல்லோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஓப்பனிங் வீரர்களும் பார்மிற்கு வந்துள்ளதால் சிஎஸ்கே அணி முன்பை விட நல்ல வலிமையான அணியாக காணப்படுகிறது.

வலிமை
சிஎஸ்கேவில் தற்போது மொயின் அலி காயம் அடைந்துள்ளார். இவர் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டாலும், இன்றே ஆடுவது சந்தேகம்தான். இவருக்கு இன்று நடக்கும் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

பேட்டிங்
இது போக இன்று உத்தப்பா ஆட வாய்ப்புள்ளது. ராயுடு காயம் காரணமாக அவதிப்படுவதால் அவர் ஆடுவது சந்தேகம். பிராவோ, டு பிளசிஸ், சாம் கரன், இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஆடுவது உறுதி.

அணி விவரம்
ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ், ரூத்துராஜ், ரெய்னா, உத்தப்பா (அல்லது ராயுடு) தோனி, ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷரத்துல் தாக்கூர், சாகர், இம்ரான் தாஹிர் ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications