For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனஉளைச்சல்.. 2 வருட போராட்டம்.. ஒரே போட்டியில் "சம்பவம்" செய்த இளம் வீரர்.. இனிமேதான் ஆட்டமே!

சென்னை: நேற்று சென்னைக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் இளம் ஓப்பனிங் வீரர் ப்ரித்வி ஷா மிகவும் சிறப்பாக ஆடினார்.

சென்னைக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வென்றது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் பண்ட் பவுலிங் செய்ய முடிவு செய்தார். நேற்று சென்னை அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது.

ஆனால் பவுலிங் மோசமாக சொதப்பியதால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 188 ரன்கள் எடுத்தது. 18.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து டெல்லி எளிதாக வெற்றி பெற்றது

சென்னை

சென்னை

இந்த போட்டியில் ப்ரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். கடந்த 2 வருடமாக ப்ரித்வி ஷா பார்மில் இல்லை. இவரோடு அறிமுகம் ஆன பண்ட், கில் எல்லாம் புதிய உயரங்களை தொட்டுவிட்ட நிலையில், ஷா மட்டும் தன்னை நிரூபிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். 2019, 2020 ஐபிஎல்லில் இவர் சரியாக ஆடவில்லை.

ஷா

ஷா

அதற்கு அடுத்து நடந்த சர்வதேச தொடர்களிலும் மோசமாக சொதப்பினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ப்ரித்வி ஷா மோசமாக சொதப்பிய நிலையில், மொத்தமாக அவர் இந்திய தேசிய அணியில் இருந்தே நீக்கப்பட்டார். இவரின் ஆட்டம் முடிந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனர்.

டெல்லி

டெல்லி

ஏன் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கே, ஷா பயிற்சியே மேற்கொள்வது இல்லை என்று புகார் அளித்தார். நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் என்று ஷா வெளிப்படையாக அறிவித்து பேட்டி அளித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ப்ரித்வி ஷா பார்மிற்கு திரும்பினார்.

ஏன்

ஏன்

அதிரடியாக ஆடிய ஷா 200+, 180+ என்று விஜய் ஹசாரே கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் தெறிக்கவிட்டார். இரண்டு வருட அவமானங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்க அந்த தொடரில் தன்னை ப்ரித்வி ஷா தயார் படுத்திக்கொண்டார். நேற்று நடந்த போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை என்றால் மொத்தமாக வாய்ப்பு பறிக்கப்பட்டு இருக்கும்.

பார்ம் இல்லை

பார்ம் இல்லை

நேற்று நடந்த மேட்ச் இவருக்கு வாழ்வா சாவா ஆட்டம்தான். இதை உணர்ந்து கொண்டு களமிறங்கிய ஷா, முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டினார். பாஸ்ட் பவுலர்களை குறி வைத்து அடித்து வெளுத்தார். சிக்ஸ் அடிப்பதை விட தன்னுடைய ஸ்டைலில் பவுண்டரி அடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

மனஉளைச்சல்

மனஉளைச்சல்

நேற்று மட்டும் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களை ப்ரித்வி ஷா விளாசினார். வெறும் 38 பந்தில் 78 ரன்களை ஷா அதிரடியாக எடுத்தார். என்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்ற போகிறேன் என்று ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

கம்பேக்

கம்பேக்

அதற்கு ஏற்றபடி நேற்று இவரின் பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது. இரண்டு வருட போராட்டத்திற்கு பின் தனது கம்பேக்கை ஷா வலுவாக பதிவு செய்துள்ளார். இவரின் உண்மையான ருத்ரதாண்டவத்தை கண்டிப்பாக இனி வரும் போட்டிகளில் பார்க்க முடியும்.

Story first published: Sunday, April 11, 2021, 15:10 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
IPL 2021: Prithvi Shaw gives a befitting come back to the Delhi team after 2 years of form out.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+