Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து பவுண்டரி.. மரணக்காட்டு காட்டிய பிரித்வி ஷா..மிரண்டு நின்ற கொல்கத்தா..டெல்லி அணி அபாரம்

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அசால்டாக வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 154/6 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 156/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் அதிரடி ஆட்டம் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடக்கம்

தொடக்கம்

கொல்கத்தா அணி வழக்கம் போல இந்த முறையும் டாப் ஆர்டரில் நல்ல பார்ட்னர்ஷிப் அமையாமல் சொதப்பியது. ஓப்பனிங் களமிறங்கிய நிதிஷ் ராணா - சுப்மன் கில் ஜோடி 21 ரன்களுக்கு பிரிந்தது. நிதிஷ ராணா 15 ரன்களுக்கு அவுட்டானார். இதன்பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி, சுப்மன் கில்லுடன் நிதானமாக ரன் சேர்த்தனர். இதனால் பவர் ப்ளேவின் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பு 45 ரன்கள் எடுத்தது.

 மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பொறுமையாக ஆடி வந்த திரிபாதி 17 ரன்களுக்கு ஆவேஷ் கான் பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பின்னர் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் லிலித் யாதவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

ஒரு புறம் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதனால் மறுமுனையில் ஒற்றை ஆளாக போராடி வந்த சுப்மன் கில் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் 43 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 27 பந்துகளை சந்தித்த அவர் 45 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும்.

அதிரடி

அதிரடி

இவருடன் ஆடி வந்த மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்களை இழந்து 154 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய லலித் யாதவ், அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சற்று உதவுவதால் இந்த இலக்கை டெல்லி அணி துரத்துவது கடினமாக இருக்காது எனக்கூறப்படுகிறது.

மிரட்டிய பிரித்வி ஷா

மிரட்டிய பிரித்வி ஷா

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் சிறப்பாக ஆடினர். குறிப்பாக பிரித்விஷா எதிரணி வீரர்களுக்கு மரணக்காட்டு காட்டினார். குறிப்பாக ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து அசத்தினார். ஐபிஎல்-ல் ரஹானேவுக்கு அடுத்ததாக ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனால் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் பிரித்வி ஷா.

அசால்டாக வெற்றி

அசால்டாக வெற்றி

அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷிகர் தவான் 47 பந்துகளில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு மட்டும் 132 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதன் பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டோய்னிஸ் ரன் சேர்க்க 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.

Story first published: Thursday, April 29, 2021, 23:09 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+