Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசல் எல்லாம் ஓரமா போங்க.. ஐபிஎல் உலகில் புயலை கிளப்பும் தமிழக வீரர்.. என்னா அடி.. வைரல் வீடியோ!

சென்னை: தமிழக வீரர் ஷாருக்கான் 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மிகவும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க காத்துகொண்டு இருக்கிறார்கள். அசாருதீன் தொடங்கி ஷாருக்கான் வரை பல இளம் வீரர்கள் இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர்.

பஞ்சாப் அணியால் தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சையது

சையது

தமிழக அணிக்காக சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக ஆடியவர்தான் ஷாருக்கான். தமிழக அணியின் வெற்றிக்கு இந்த தொடரில் மிக முக்கியமான காரணமாக ஷாருக்கான் இருந்தார். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடுவதுதான் இவரின் இயல்பு.

எப்படி

எப்படி

அதிலும் கடைசி மூன்று ஓவரில் மேட்ச் முடிவை மாற்றுவது, எதிர்பார்க்காத நேரத்தில் சிக்ஸ் அடித்து, ஆட்டத்தின் போக்கை மாற்றுவது என்று ஷாருக்கான் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடினார். இவரின் திறமையை பார்த்து மிரண்டு போன பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

மாஸ்

மாஸ்

தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சி ஆட்டங்களில் இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். தொடர்ச்சியாக நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். சிக்ஸ், பவுண்டரி என்று தெறிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார், பயிற்சி ஆட்டம் எதிலும் கொஞ்சம் கூட ஷாருக்கான் திணறவில்லை.

வீடியோ

ஷாருக்கான் இப்படி அதிரடியாக ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. பஞ்சாப் அணியே இவரின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஷாருக்கான்தான் புதிய சிக்ஸ் மிஷின் என்று கூறி பாராட்டி உள்ளனர்.

கவனம்

கவனம்

இந்த வருடம் ரசல் போன்ற அதிரடி வீரர்களை ஓரம்கட்டி ஷாருக்கான் பெயர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலம் ஐபிஎல் உலகில் இவர் கவனம் ஈர்த்துள்ளார். இவருக்கு கண்டிப்பாக இதனால் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, April 9, 2021, 9:44 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+