Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழில் பேசி பிளான் போட்ட 2 வீரர்கள்.. பாதி ஆட்டத்தில் குழம்பி போன சிஎஸ்கே.. நேற்று என்ன நடந்தது?

சென்னை: நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு பஞ்சாப் வீரர்கள் தமிழில் பேசி சிஎஸ்கேவை குழப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Recommended Video

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. CSK-வுக்கு எதிராக தமிழில் ஸ்கெட்ச் போட்ட வீரர்கள்

நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. முதலில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே எளிதாக பஞ்சாப்பை அடித்து துவைத்து துவம்சம் செய்தது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் 20 ஓவருக்கு 106/8 ரன்கள் ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பஞ்சாப்

பஞ்சாப்

நேற்று தொடக்கத்திலேயே பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முதல் 6 ஓவரிலேயே பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் பஞ்சாப் அணியில் ஷாருக்கான் முருகன் அஸ்வின் மட்டுமே கொஞ்சம் நிலையாக ஆடிக்கொண்டு இருந்தனர்.

சரிவு

சரிவு

அணியை சரிவில் இருந்து மீட்டு, கொஞ்சம் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் 12 ஓவர்கள் முடிந்த பின் ஷாருக்கானும் அதிரடி காட்ட தொடங்கினார். கொஞ்சம் வேகமாக அடித்து ஆட தொடங்கினார்.

முருகன்

முருகன்

இந்த ஆட்டத்தின் போது முருகன் அஸ்வின் - ஷாருக்கான் இரண்டு பேரும் தமிழில் பேசி திட்டங்களை வகுத்தனர். இரண்டு பேரும் தமிழர்கள் என்பதால் மச்சான் பொறுமையா ஆடு, பிரச்சனை இல்லை பார்த்துக்கலாம்.. ஆப் சைட்ல போடுறாங்க, டிபன்ஸ் ஆடு என்று தமிழிலேயே திட்டங்களை வகுத்து பேட்டிங் செய்தனர்.

தமிழில் பேசினார்கள்

தமிழில் பேசினார்கள்

சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் யாரும் இல்லை. தமிழ் புரிய கூடிய ஒரே வீரரான ராயுடுவும் லாங் ஆனில் பீல்டிங் செய்தார். இதனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று சிஎஸ்கேவால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவும் கூட இவர்களின் விக்கெட்டை நேற்று எடுக்க முடியாமல் சிஎஸ்கே அணி திணறியதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 17, 2021, 9:14 [IST]
Other articles published on Apr 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+