For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கலீல், பிரைஸ்டோ அதிரடி.. மொத்தமாக சுருண்ட பஞ்சாப்.. ஹைதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அதிரடியாக வென்று 2021 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Recommended Video

SRHல் இனி அதிரடிக்கு Kane Williamson அமைதிக்கு Kedar jadhav |Oneindia Tamil

2021 ஐபிஎல் போட்டிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. லீக் போட்டிகள் மும்பை மற்றும் சென்னை மைதானங்களில் மாறி மாறி நடந்து வருகிறது. இன்று நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத்திற்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தது.

இன்று ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் 18.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஹைதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வார்னர்

வார்னர்

இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டடிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இருக்கிறார்.

ஆடும் அணி

ஆடும் அணி

இன்று ஆடும் பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், மொய்சஸ் ஹெண்ட்ரிகஸ், நிக்கோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான், பேபியன் ஆலன், முருகன் அஸ்வின், முகமது சாமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆடுகிறார்கள்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

இன்று ஆடும் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், ஜானி பிரைஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய்சங்கர், அபிஷேக் சர்மா, கேதார் ஜாதவ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல் ஆகியோர் ஆடுகிறார்கள்.

டாஸ்

டாஸ்

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த பிட்சில் சேசிங் செய்வது கடினம். ஹைதராபாத் அதிக போட்டியில் சேஸிங்கில் தோல்வி அடைந்துள்ளதால் பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே சொதப்பியது. பஞ்சாப் டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. மயங்க் அகர்வால் மட்டும் 22 ரன்கள் எடுத்தார். மற்றபடி பஞ்சாப் அணியில் ராகுல் 4, கெயில் 15, பூரான் 0, ஹூடா 13 என்று மிக மோசமாக எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் சென்றனர்.

கலீல்

கலீல்

பின்னர் பஞ்சாப் அணியில் இறங்கிய ஷாருக்கான் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை அளித்து 22 ரன்கள் எடுத்தார். இன்று அதிரடியாக பவுலிங் செய்த கலீல் 3 விக்கெட் எடுத்தார். அபிஷேக் சர்மா 2 விக்கெட் எடுத்தார். இதனால் ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத்திற்கு பஞ்சாப் 121 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி எந்த தவறுக்கும் இடம் கொடுக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஹைதராபாத் அணி அதிரடியாக பேட்டிங் செய்தது. வார்னர் - பிரைஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வார்னர் 37 பந்துகள் பிடித்து 37 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் வார்னர் அவுட் ஆன பின் வில்லியம்சன் நிதானமாக ஆடினார்.

வெற்றி

வெற்றி

இன்னொரு பக்கம் பிரைஸ்டோ அதிரடியாக 56 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஹைதராபாத் 18.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஹைதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Story first published: Wednesday, April 21, 2021, 18:59 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
IPL 2021: Punjab wins the toss and chooses to bat against SRH
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+