ஆடுவதே சந்தேகமாக இருந்தது.. அடுத்தடுத்த ஏமாற்றம்.. ஆனாலும் எழுந்து நின்ற இளம் வீரர்.. தரமான பதிலடி
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை வெற்றிபெற அந்த ஸ்பின் பவுலர் ராகுல் சாகர்தான் முக்கியமான காரணமாக இருந்தார்.
கடைசி நொடி வரை திக் திக் என்று சென்ற போட்டியில் மும்பையில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை வென்றுள்ளது. "கொல்கத்தா என்றாலே அடிப்போம்" என்பதுதான் மும்பையின் ஐபிஎல் வரலாறு.
நேற்று போட்டியில் அதை மீண்டும் ஒருமுறை மும்பை அணி நிரூபித்தது. தோல்வியின் விளிம்பில் இருந்த மும்பை அணி கடைசி 4 ஓவர்களில் மீண்டு வந்து வெற்றியை ருசித்தது.

வெற்றி
இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் அது ராகுல் சாகர்தான். கடைசி கட்டத்தில் இவர் வீசிய நான்கு ஓவர்கள்தான் மும்பைக்கு வெற்றி தேடி தந்தது. நேற்று கொல்கத்தாவின் ஓப்பனிங் ஜோடியை விக்கெட் எடுக்க முடியாமல் மும்பை பாஸ்ட் பவுலர்கள் திணறினார்கள்.

ராகுல் சாகர்
அப்போது ராகுல் சாகர்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து, போட்டியின் போக்கையே மாற்றினார். நேற்று 4 ஓவர்கள் வீசிய ராகுல் சாகர் வெறும் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். நிதிஷ் ராணா, திரிப்பாதி, இயான் மோர்கன், கில் என்று இவர் எடுத்த 4 விக்கெட்டுமே கொல்கத்தாவின் டாப் ஆர்டர் வீரர்களின் விக்கெட்டுகள்.

விக்கெட்
அதிலும் கொல்கத்தா அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருந்த நேரத்தில் இந்த விக்கெட்டுகளை சாகர் அடுத்தடுத்து எடுத்தார். நேற்று பாதி ஆட்டத்திற்கு பின் பிட்ச் மொத்தமாக ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறியது. இதை பயன்படுத்திக்கொண்டு வரிசையாக ராகுல் சாகர் விக்கெட்டுகளை எடுத்தார். நேற்று இவர்தான் மும்பை அணியை சரிவில் இருந்தே மீட்டது.

இயான்
அதிலும் ராணா, இயான் மோர்கன் விக்கெட்டுகளை எடுக்க இவர் வகுத்த திட்டம், பந்தை உள்ளேயும், வெளியேயையும் மாற்றி மாற்றி சுழற்றிய விதம் சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் ராகுல் சாகர் ஆடினார். ஆனால் அதில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் மீண்டும் சாகர் அணிக்குள் வருவது கஷ்டம் என்று கூறப்பட்டது.

கஷ்டம்
அவ்வளவுதான் இனி இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்பட்டது. அதேபோல் முதல் ஐபிஎல் போட்டியிலும் பெங்களூருக்கு சாகர் சரியாக பவுலிங் செய்யவில்லை. இதனால் இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அடுத்தடுத்து ஏமாற்றங்களை சந்தித்த இவர் தற்போது பார்மிற்கு திரும்பி உள்ளார். ஒரே போட்டியில் தனி நபராக மும்பையை வெற்றிபெற வைத்து அசத்தி உள்ளார்!


Click it and Unblock the Notifications