Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஏமாத்திட்டாரு".. அவரை நம்பித்தானே எடுத்தோம்.. கோபத்தில் கேப்டன்.. கொக்கி போட்டு தூக்கும் நிர்வாகம்!

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிராக நேற்று ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஒருவர் ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் அணியை சேர்ந்த ஸ்பின் ஆல் ரவுண்டர் ராகுல் திவாதியா. கடந்த வருடம் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்கு இவர் ஆடிய விதம் பெரிய அளவில் வைரலானது. முக்கியமாக பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றிபெற ராகுல்தான் காரணமாக இருந்தார்.

காட்ரல் ஓவரில் இவர் 5 சிக்ஸ் அடித்து அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டிதான் ராகுல் திவாதியாவிற்கு அடையாளத்தை கொடுத்தது. ஆனால் அந்த தொடரில் ராகுல் திவாதியா அதன்பின் பெரிய அளவில் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

அந்த தொடரில் ராகுல் திவாதியா பெரிய எந்த போட்டியிலும் ஆடவில்லை. விக்கெட் எடுத்தாலும் பெரிதாக பேட்டிங் செய்யவில்லை. ஆனால் பஞ்சாப்பிற்கு எதிரான அந்த ஒரு போட்டி காரணமாக ராகுல் திவாதியா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்திய அணி

இந்திய அணி

இதனால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ராகுல் திவாதியா பெரிய அளவில் ஆல் ரவுண்டராக செயல்படவில்லை. இந்த வருடமும் ராஜஸ்தான் அணியில் ராகுல் திவாதியா பெரிதாக ஆடவில்லை. ராஜஸ்தான் இதுவரை 3 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்துள்ளது.

2 தோல்வி

2 தோல்வி

இந்த இரண்டிலும் ராகுல் திவாதியா கடைசியில் கொஞ்சம் அடித்து ஆடி இருந்தால் கண்டிப்பாக ராஜஸ்தான் வென்று இருக்கும். ஆனால் இரண்டிலும் ராகுல் திவாதியா மோசமாக சொதப்பி அவுட்டானார். எந்த போட்டியிலும் இவர் 25 ரன்களை தாண்டவில்லை. முக்கியமாக நேற்று போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக ராகுல் திவாதியா சுத்தமாக சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

பந்தை சரியாக கணிக்க கூட முடியாமல் ராகுல் திவாதியா கஷ்டப்பட்டார். ராஜஸ்தான் இவரை ஆல் ரவுண்டர் என்று நம்பி மொத்தமாக ஏமாந்து போய் உள்ளது. வேறு ஒரு ஸ்பின் ஆல் ரவுண்டரை எடுத்து இருந்தால் கூட ராஜஸ்தானின் பேட்டிங் சிறப்பாக இருந்து இருக்கும்.. ஆனால் ராகுல் திவாதியாவோ ஒரே ஒரு போட்டியில் ஆடிவிட்டு மற்ற எல்லா போட்டிகளிலும் வரிசையாக சொதப்பிக்கொண்டு இருக்கிறார்.

Story first published: Tuesday, April 20, 2021, 12:10 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+