Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நம்ம சின்ன தலையா இது”.. ஜிவா தோனி போட்ட குத்தாட்டம்.. ரெய்னா செய்த நெகிழ்ச்சி விஷயம்- வைரல் வீடியோ

அமீரகம்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனியின் மகள் செய்த சுவாரஸ்ய விஷயத்திற்காக ரெய்னா மனம் விட்டு சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பியுள்ளது.

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கே சொதப்பல்

அந்த அணியில் ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் வந்த மொயின் அலி 0 (6), ராபின் உத்தப்பா 2 (6), அம்பத்தி ராயுடு 4 (5), மகேந்திரசிங் தோனி 12 (15) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். குறிப்பாக மகேந்திரசிங் தோனி மீண்டும் ஒருமுறை ஏமாற்றியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

 குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டூப்ளசிஸ் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாக ரன்களை குவித்தனர். முதலில் மெதுவாக விளையாடிய டூப்ளசிஸ் போக போக அதிரடி காட்டினார். 55 பந்துகளை சந்தித்த அவர் 76 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார். மறுமுனையில் ஜடேஜாவும் ரன் சேர்க்க 15 ஓவர்களில் 82/5 என இருந்த சிஎஸ்கே 20 ஓவர்களின் முடிவில் 134/6 என ரன்களை குவித்தது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

சென்னை அணி கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பியது. குறிப்பாக மிடில் ஆர்டர் முற்றிலும் ஏமாற்றியது. இந்த இடத்தில் சுரேஷ் ரெய்னா இருந்திருந்தால் அணிக்கு அவர் பெரும் உதவியாகி இருப்பார். அவர் இல்லாதது தான் மிடில் ஆர்டர் சொதப்பலுக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சனங்களை வீசி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லாத காரணத்தினால் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

ரெய்னாவின் சுவாரஸ்ய செயல்

ரெய்னாவின் சுவாரஸ்ய செயல்

இந்நிலையில் களத்திற்கு வெளியே சுரேஷ் ரெய்னா செய்த விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது. சென்னை அணி எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என தோனியின் மகள் ஜிவா தோனி பிரார்த்தனை செய்வார். இன்று ஒருபடி மேல் சென்று விசில் அடித்து மைதானத்திலேயே ஆட்டம் போட்டார். ஜிவாவின் நடனத்தை தூரத்தில் இருந்தவாறு பார்த்த சுரேஷ் ரெய்னா அழகான புன்னகையை கொடுத்தார். அவரின் இந்த சிரிப்பு ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

அணிக்குள் இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த ரெய்னா, என்னை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை, வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது போல் ஒருபுறமும், ஜிவாவின் அழகான நடனத்தை பார்த்து தான் சிரித்ததாக மறுபுறமும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, October 7, 2021, 19:53 [IST]
Other articles published on Oct 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+