Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானம்.. கிண்டல்.. ஒவ்வொரு பந்திலும் சொல்லி சொல்லி "அடித்த" ரெய்னா.. களத்திலேயே செம மெசேஜ்!

சென்னை: டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரெய்னா மிகவும் அதிரடியாக ஆடி.. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளார்.

டெல்லி சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே அணி திணறியது.

ஆனால் அதன்பின் களமிறங்கிய மொயின் அலி, ரெய்னா இருவரும் அதிரடியாக ஆடி சென்னையை சரிவில் இருந்து மீட்டனர். முக்கியமாக மிடில் ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்னுக்கு குறையாமல் அடித்து அதிரடி காட்டியது.

எப்படி

எப்படி

கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு பின் ரெய்னா இன்றுதான் களமிறங்கினார். கடந்த வருடம் குடும்ப காரணங்களுக்காக ரெய்னா ஆடவில்லை. அதோடு சர்வதேச போட்டிகளில் இருந்தும் ரெய்னா ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அவர் பார்மில் இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

சந்தேகம்

சந்தேகம்

முக்கியமாக பால்கனி கேட்டு இவர் அணியில் இருந்து வெளியேறிவிட்டார் என்று பலரும் கிண்டல் செய்தனர். ரெய்னாவின் கதை முடிந்துவிட்டது. இனி அவர் பார்மிற்கு திரும்பவே மாட்டார் என்று பலரும் விமர்சனம் வைத்தனர். ரெய்னாவும் கடந்த மாதமெல்லாம் பெரிதாக பயிற்சி எடுக்கவில்லை.

பயிற்சி

பயிற்சி

அதேபோல் சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும் ரெய்னா பெரிதாக ஆடவில்லை. இதனால் இன்று ரெய்னா சொதப்புவார் என்றேஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவோ வேறு பிளானில் களத்திற்கு வந்தார். முதல் 10 பந்துகள் கொஞ்சம் பொறுமையாக ரெய்னா ஆடினார். அதன்பின் ஸ்பின் பவுலர்களை குறி வைத்து ரெய்னா தாக்கினார்.

தாக்கினார்

தாக்கினார்

அஸ்வின், அமித் மிஸ்ரா போன்ற பவுலர்களை குறி வைத்து ரெய்னா தாக்கினார். முதல் 10 பந்துக்கு பின் அடித்து வெளுக்க தொடங்கிய ரெய்னா மாறி சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். கிட்டதட்ட 2 வருடங்களுக்கு பின் களத்திற்கு வருவதால் அந்த வெறியோடு ஆடினார். தேவையான பந்துகளை குறி வைத்து சிக்ஸர் அடித்தார். வெறும் 32 பந்துகளில், அதிரடியாக ரெய்னா அரை சதம் அடித்து சிஎஸ்கேவில் பெரிய கம்பேக் கொடுத்தார்.

கம்பேக்

கம்பேக்

அதன்பின்பும் அதிரடியாக ஆடும் திட்டத்திலேயே இருந்தார். ஆனால் ஜடேஜா செய்த தவறால் 54 ரன்கள் இருந்த போது ரெய்னா ரன் அவுட் ஆனார். 36 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்ஸ் அடித்து ரெய்னா இன்று கலக்கினார். தன்னுடைய கம்பேக்கை ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ரெய்னா அறிவித்துள்ளார்.. நான் மிஸ்டர் ஐபிஎல்... திரும்பி வந்துவிட்டேன் என்று ரெய்னா 7 அணிகளுக்கும் வலுவான மெசேஜ் அனுப்பி உள்ளார்.

Story first published: Saturday, April 10, 2021, 21:02 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+