Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை மீண்டும் எங்களுக்கே கொடுங்க.. சிஎஸ்கே ஓப்பனரை கேட்கும் ராஜஸ்தான்.. டிரான்ஸ்பர் பிளான்?

சென்னை: ராஜஸ்தான் அணி சிஎஸ்கேவிடம் இருந்து ராபின் உத்தப்பாவை டிரான்ஸ்பர் செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

Robin Uththappa-வை CSK-விடம் மீண்டும் கேட்கும் Rajasthan அணி.. Transfer திட்டமா?

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. முதல் போட்டியில் டெல்லியிடம் தோல்வி அடைந்தாலும் கூட வரிசையாக 4 போட்டிகளில் வென்று அசத்தி உள்ளது.

முக்கியமாக சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர்கள் பார்மிற்கு திரும்பி உள்ளனர். ரூத்துராஜ், டு பிளசிஸ் இரண்டு பேருமே சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் இன்னொரு ஓப்பனிங் வீரர் ராபின் உத்தப்பா அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். சிஎஸ்கே அணியுடன் இவர் இணைந்தாலும் இதுவரை அணிக்காக ஆடவில்லை. ரூத்துராஜ் பார்மிற்கு திரும்பி உள்ள நிலையில் ராபின் உத்தப்பா அணியில் இடம்பெறுவது சந்தேகம் ஆகியுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இவர் முன்பு கொல்கத்தா அணியிலும் பின் ராஜஸ்தான் அணியிலும் இருந்தார். கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரில் இவர் சிறப்பாக ஆடினார். இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு முன் இவர் சிஎஸ்கே அணிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

தகவல்

தகவல்

தற்போது இவரை மீண்டும் ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. மீண்டும் இவரை எங்களுக்கே கொடுத்து விடுங்கள் என்று ராஜஸ்தான் அணி கோரிக்கை வைத்துள்ளது. தற்போது ஐபிஎல் 2021 தொடருக்கான டிரான்ஸ்பர் விண்டோ திறந்துள்ளது.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இந்த டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தி சிஎஸ்கேவிடம் இருந்து இவரை மீண்டும் ராஜஸ்தான் அணி பெற முயல்கிறது. ராஜஸ்தான் அணியில் தற்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லை. ஓப்பனிங் வீரர்கள் இல்லை. இதனால் அந்த அணி மீண்டும் உத்தப்பாவை கேட்கும் முடிவில் இறங்கி உள்ளது.

Story first published: Wednesday, April 28, 2021, 20:23 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+