ப்ளீஸ்.. எங்களுக்கு உதவுங்க.. பரிதாபமான நிலையில் ராஜஸ்தான்.. "லோன்" கேட்க முடிவு.. என்ன நடந்தது?
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. எப்படியாவது இந்த தொடரில் மீண்டு வரும் முடிவில் ராஜஸ்தான் உள்ளது.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் அணி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முதலில் ராஜஸ்தான் அணியின் முக்கியமான பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் அடைந்தார்.
மீண்டும் இவர் அணிக்கு வருவார் என்று கருதப்பட்ட நிலையில் மொத்தமாக தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

ராஜஸ்தான்
ஸ்டோக்ஸ் விரலில் காயம் ஏற்பட்ட நிலையில் பாதியில் தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் லியாம் லிவிங்ஸ்டன் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறினார். 8 வெளிநாட்டு வீரர்களில் ராஜஸ்தானில் 3 பேர் வெளியேறினார்கள்.

வீரர்கள்
இது போக தற்போது கொரோனா காரணமாக ஆண்ட்ரு டை ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணியில் தற்போது 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மிகவும் பரிதாபமான நிலையில் அந்த அணி உள்ளது. இதையடுத்து தற்போது பிற அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை கடன் கேட்கும் முடிவில் ராஜஸ்தான் அணி உள்ளது.

ராஜஸ்தான் அணி
தற்போது ஐபிஎல் டிரான்ஸ்பர் விண்டோ திறக்கப்பட்டுள்ளது. பிற அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை இதன் மூலம் டிரான்ஸ்பர் செய்ய முடியும். இந்த டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தி பிற அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை லோன் கேட்கும் முடிவில் ராஜஸ்தான் உள்ளது.

திட்டம்
எங்களுக்கு பிற அணிகள் உதவ வேண்டும் என்று ராஜஸ்தான் நிர்வாகம் இப்போதே கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது. மும்பை அணியின் கிறிஸ் லின் தொடங்கி ஒவ்வொரு அணியிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை பார்த்து, 3 பேரை தங்கள் அணியில் எடுக்கும் முடிவில் ராஜஸ்தான் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications