Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் அணி அபார பவுலிங்.. ஒற்றை ஆளாக போராடிய பண்ட்.. டெல்லி அணி 147 ரன்கள் குவிப்பு!

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இளம் கேப்டன்களை கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்ச்சில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி அணியில் இந்த போட்டிக்காக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்துதலில் இருந்து வந்த தென்னாப்பிரிக்க பவுலர் ரபாடா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பங்கேற்றிருந்த ஹெட்மெயர் உட்காரவைக்கப்பட்டுள்ளார். அதே போல இளம் வீரர் லலித் யாதவ் தனது அறிமுக போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கவுள்ளார்.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல ஸ்ரேயாஷ் கோபாலுக்கு பதிலாக உனத்கட் களமிறக்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

டெல்லி கேப்பிடல்ஸ் : பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ரஹானே, ஸ்டோய்னிஸ், க்றிஸ் வோக்ஸ், அஸ்வின், லலித் யாதவ், ரபாடா, டாம் கரண், ஆவேஷ் காண்

ராஜஸ்தான் ராயல்ஸ்: மன்னன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஜாஸ் பட்லர், ஷிவம் தூபே, ரியான் பராக், ராகுல் தேவட்டியா, க்றிஸ் மோரிஸ், சேட்டன் சகாரியா, உனத்கட், முஸ்திவிஸுர் ரஹ்மான்

கடும் போட்டி

கடும் போட்டி

முதல் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்குகிறது. அதே போல முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் 2வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

 அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் (9), ப்ரித்வி ஷா (2), ரஹானே (8) மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (0) எடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி அந்த அணி இதனால் 37 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து டெல்லி அணி தடுமாறி வந்தது.

 பண்ட் போராட்டம்

பண்ட் போராட்டம்

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டார். அறிமுக வீரர் லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்த அவர் 32 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய லலித் யாதவ் 20 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் டாம் கரண் (20) கிறிஸ் வோக்ஸ் (15) அஸ்வின் (7), ரபாடா (9) ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.

Story first published: Thursday, April 15, 2021, 21:56 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+