Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையின் கடும் போராட்டம்.. ஒரே பந்தில் அனைத்தையும் சொதப்பிய க்ருணால்.. டெல்லி த்ரில் வெற்றி!

சார்ஜா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் இன்று மும்பை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி கடும் போராட்டத்திற்கு பின்னர் 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 தொடக்கமே சொதப்பல்

தொடக்கமே சொதப்பல்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 7 ரன்களுக்கு நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான டிகாக் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தாலும், 19 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தார். -

37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் - சௌரப் திவாரி ஆகியோர் சற்று மீட்டனர். ஆனால் அது நீடிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 33 (26), சௌரப் திவாரி 15 (18) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

மும்பை அணியின் நம்பிக்கை வீரரான கெயீரன் பொல்லார்ட் 6 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். கடைசியில் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களும், ஜெயந்த் யாதவ் 11 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்‌ஷர் படேல், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், ஆன்ரிச் நார்ட்ஜே மற்றும் அஸ்வின் ஆகியோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

சரிந்த மிடில் ஆர்டர்

சரிந்த மிடில் ஆர்டர்

இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 8 ரன்களில் ரன் அவுட்டானார். கெயீரன் பொல்லார்ட் வேகமாக செயல்பட்டு அந்த விக்கெட்டை எடுத்தார். ப்ரித்வி ஷா 6 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். பொறுப்புடன் ஆட வேண்டிய ஸ்டீவன் ஸ்மித் 9 ரன்களிலும் வெளியேறினார். இதனால் அந்த அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் வந்த பண்ட் 26 ரன்கள், அக்‌ஷர் 9 ரன்கள், ஹெட்மெயர் 15 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

கடைசி வரை நிதானமாக நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு தலைவலி கொடுத்தார். இதனால் கடைசி 6 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை க்ருணால் பாண்ட்யாவிடம் கொடுத்தார் ரோகித் சர்மா. பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து முடித்துக்கொடுத்தார் அஸ்வின். 19.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Saturday, October 2, 2021, 19:30 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+