Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘மாஸ்டர்’ தோனி சாதாரணமானவர் அல்ல.. ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளரே எச்சரிக்கை... சூடு பிடிக்கும் களம்!

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியை குறைத்து மதிப்பிட முடியாது என ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கடிச் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் 2 இடங்களுக்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மாறி மாறி போட்டிப்போட்டு வருகின்றன. இதற்கு ஒரு தீர்வாக இந்த போட்டி அமையவுள்ளது.

 மோதல்

மோதல்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 17 முறையும், பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் போட்டி, பேட்டிங்கிற்கு நன்கு உதவக்கூடிய மும்பை மைதானத்தில் நடைபெறுவதால், இந்த போட்டியில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ள சைமன் கடிச், தோனி ஒரு மாஸ்டர், சிஎஸ்கே அணி இந்தாண்டு சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. 3 வெற்றிகளுடன் டாப்பில் உள்ளது. எதிரணி என்ற முறையில் சென்னை அணி மீது எங்களுக்கு பெரிய மரியாதை உள்ளது. அவர்களின் பேட்டிங் வரிசை மிகவும் சேதப்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் எங்களிடம் சிறப்பான பவுலிங் படை உள்ளது. அதே போல மும்பை மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு சில சிறந்த போட்டிகள் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கேன் ரிச்சர்ட்சன்

கேன் ரிச்சர்ட்சன்

இதே போல ஆர்சிபி வீரர் கேன் ரிச்சர்ட்ஸனும் சிஎஸ்கே குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் இந்த போட்டியில் யாருக்கு வெற்றி என்பது வான்கடே மைதானத்தின் தன்மை பொருத்துதான் உள்ளது. சிஎஸ்கே தொடக்க வீரர்கள் டுப்ளசிஸ் மற்றும் ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அவர்களை தடுக்க நல்ல திட்டத்துடன் வருவோம்.

அனுபவசாலிகள்

அனுபவசாலிகள்

சிஎஸ்கே அணி முழுவதும் அனுபவம் நிறைந்த வீரர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் இதுவரை 3 கோப்பைகளை தட்டிச்சென்றுள்ளனர். எனவே இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான தாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரரான கேன் ரிச்சர்ட்சன் சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியில் இணைந்தார். இந்த போட்டியில் அவர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெண்ட்

ட்ரெண்ட்

இந்த இரு அணிகளும் மோதும் லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளின் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அதற்காக சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்தாண்டு ட்ரெண்டான பெங்களூரு ரசிகைகளின் பாடல் வீடியோ போன்று இந்தாண்டும் சண்டையிட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, April 25, 2021, 13:05 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+