Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு விஷயம் மிக டேஞ்சர்.. நம்பிக்கையுடன் இருந்த கோலிக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை.. காரணம்?

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை அந்த அணியின் பயிற்சியாளர் விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி நடை போட்டாலும், கொல்கத்தா அணியில் ஒரு டேஞ்சர் விஷயம் உள்ளதாக ஆர்சிபி பயிற்சியாளர் சைமன் கடிச் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வெற்றி

தொடர்ந்து வெற்றி

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் வெற்றி நடை போட்டு வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி அணி 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மதியம் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

சைமன் அட்வைஸ்

சைமன் அட்வைஸ்

வெற்றி பயனத்தை தொடர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசியுள்ள சைமன் கடிச், கொல்கத்தா அணி கடந்த 2 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களிடம் மிகச்சிறந்த பேட்டிங், பவுலிங் பலம் உள்ளது. கடந்த போட்டியில் அனைத்தையும் சரியாக செய்த போதும், சிறிய தவறால் தோல்வியடைந்தது.

மிகவும் டேஞ்சர்

மிகவும் டேஞ்சர்

2வது போட்டியில் தோல்வியடைந்ததால் மீண்டு வரவேண்டும் என ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அதற்காக கடும் பயிற்சி எடுத்துள்ளனர். எனவே ஆர்சிபி அணி வெற்றியை தொடர வேண்டும் என்றால் கடும் முயற்சியை இந்த தொடரில் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 கடும் சவால்

கடும் சவால்

இந்த போட்டி பகல் நேரத்தில் நடைபெறவுள்ளதால் சென்னை மைதானத்தின் பிட்ச் பெரிய சவாலாக இருக்கும். அங்கு பந்தின் வேகம் மிக குறைவாக இருக்கும். ஸ்பின்னர்களுக்கு அதிகம் உதவும் என்பதால் பேட்ஸ்மேன்கள் கடும் முயற்சி செய்ய வேண்டும். இதே ஆர்வத்துடன் கொல்கத்தா அணியும் தீவிரமாக இருக்கும் என கட்ச் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 15:28 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+