Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை அச்சுறுத்தும் "அந்த" ஒரு விஷயம்.. 10 வருஷமா சென்னையில் இப்படி நடந்ததே இல்லை.. பரபர பின்னணி!

சென்னை: மும்பைக்கு எதிராக சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு முக்கியமான சிக்கல் ஒன்று உள்ளது.

மும்பைக்கும் சென்னைக்கும் இடையிலான முதல் ஐபிஎல் போட்டி இன்று சென்னையில் நடக்க உள்ளது. எல்லா அணிகளுக்கும் இந்த முறை ஹோம் மைதானம் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்கிறது.

சென்னை பிட்ச் இந்த போட்டிக்கு தகுந்தபடி மாற்றப்பட்டுள்ளது. ஸ்பின் பிட்ச் மைதானம் களிமண் சேர்க்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

லீக்

லீக்

இந்த போட்டி மும்பையை விட பெங்களூர் அணிக்கு சவாலாக இருக்கும். காரணம் பெங்களூர் அணி பொதுவாக களிமண் பிட்ச்களில் சரியாக விளையாடாது. அது கோலியின் ராசியா என்று தெரியவில்லை. களிமண் அதிகம் கொண்ட பிட்ச்களில் எல்லாம் பெங்களூர் அணி ஈசியாக தோல்வி அடைந்துவிடும்.

தோல்வி

தோல்வி

இது போக சென்னையில் இதுவரை பெங்களூர் அணி லீக் போட்டிகளில் 2010க்கு பின் வென்றதே இல்லை. அதோடு கிட்டத்தட்ட 11 வருடமாக இங்கு பெங்களூர் அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. 2011ல் நடந்த பிளே ஆப் போட்டி ஒன்றில் மும்பையை பெங்களூர் வீழ்த்தியது.

கடைசி

கடைசி

அதுதான் கடைசியாக சென்னையில் பெங்களூர் அணி வென்ற போட்டியாகும். சென்னை பிட்ச் என்றாலே பெங்களூர் அணி சொதப்புவதுதான் வரலாறு. இதுதான் தற்போது பெங்களூர் அணிக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. 10 வருடமாக இங்கு வெற்றிபெறாத பெங்களூர் அணி இன்று மட்டும் எப்படி வெற்றிபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

அதேபோல் மும்பை அணியும் வரிசையாக 8 சீசன்களில் 8 ஓப்பனிங் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் எந்த அணி தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளுமே இருப்பதால் கண்டிப்பாக ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

Story first published: Friday, April 9, 2021, 17:22 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+