Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏபிடி-மேக்ஸ் அதிரடி.. கோலி மாஸ் கேப்டன்சி.. கொல்கத்தாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி

மும்பை: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.

2021 ஐபிஎல் போட்டிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவிற்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தது. கொல்கத்தாவிற்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் டாஸ் வென்றது.

டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி 20 ஓவருக்கு 204/3 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து கொல்கத்தா தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் பெங்களூர் அணி மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது. பொதுவாக ஐபிஎல் அணிகள் 4 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கும். ஆனால் இன்று பெங்களூர் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஏன்

ஏன்

பெங்களூர் அணியில் இருந்து டேனியல் கிறிஸ்டின் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ராஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் இன்று கோலி, படிக்கல், ராஜத் படிதார் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்க்டன் சுந்தர். ஷாபாஸ் அகமது, கைலி ஜெமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல் ஆகியோர் ஆடுகிறார்கள்.

கொல்கத்தா

கொல்கத்தா

இன்று ஆடும் கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா, கில், ராகுல் திரிப்பாதி, இயான் மோர்கன், சாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக், ரசல், பாட் கும்மின்ஸ், ஹர்பஜன், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடுகிறார்கள்.

டாஸ்

டாஸ்

கொல்கத்தாவிற்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் டாஸ் வென்றது. டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சென்னை பிட்சில் சேசிங் செய்வது கடினமாகி உள்ளது. இதனால் பெங்களூர் டாஸ் வென்றுள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்திலேயே திணறியது. வருண் சக்ரவர்த்தி ஓவரில் அடுத்தடுத்து கோலி, படிட்டார் அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் பேட்டிங் செய்ய வந்த மேக்ஸ்வெல் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 9 ரன்னில் 2 விக்கெட் விழுந்த நிலையில் மேக்ஸ்வெல் தொடக்கத்தில் இருந்தே சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார்.

சிக்ஸ் - பவுண்டரி

சிக்ஸ் - பவுண்டரி

49 பந்துகள் பிடித்த மேக்ஸ்வெல் 3 சிக்ஸ், 9 பவுண்டரி என்று 78 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஏபிடியூம் அதிரடியாக ஆடினார். 34 பந்துகள் பிடித்த ஏபிடி 3 சிக்ஸ், 9 பவுண்டரி என்று 76 ரன்கள் எடுத்தார். மிகவும் கடினமான சென்னை பிட்சில் ஏபிடி - மேக்ஸ்வெல் இருவரும் அடித்து துவைத்தனர். இதனால் கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி 20 ஓவருக்கு 204/3 ரன்கள் எடுத்தது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடியது. இயான் மோர்கன் 29, ராகுல் திரிப்பாதி 25, கில் 21 ரன்கள் எடுத்தனர். ஆனால் கொல்கத்தா அணியில் யாரும் பெரிதாக பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.

ரசல்

ரசல்

கடைசியில் இறங்கிய ரசல் மட்டும் ஹாட் டிரிக் பவுண்டரி, சிக்ஸ் என்று வெளுத்து வாங்கினார். ஆனால் அவருக்கு யாரும் பெரிதாக பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. பெங்களூர் அணியில் சாஹல் 2 விக்கெட், ஜாமிசன் 2 விக்கெட் எடுத்து கொல்கத்தா அணிக்கு இன்னொரு பக்கம் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து கொல்கத்தா தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Sunday, April 18, 2021, 19:15 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+