Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாள் தூக்கி நின்னான் பாரு.. தனி ஆளாக சம்பவம் செய்த ஏபிடி.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி.. மாஸ் வெற்றி!

சென்னை: மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஏபிடி வில்லியர்ஸ் காட்டிய அதிரடியால் பெங்களூர் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் தொடங்கி நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பைக்கும் அணிக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் முதல் ஐபிஎல் போட்டி தற்போது நடந்தது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

கஷ்டம்

கஷ்டம்

முதல் இன்னிங்சில் பவுலிங் செய்ய எளிதாக இருக்கும். இரண்டாவது இன்னிங்சில் பனி காரணமாக பெரிய அளவில் பந்தில் கிரிப் கிடைக்காது. இதனால் கோலி புத்திசாலித்தனமாக செயல்பட்டு பவுலிங் தேர்வு செய்தார்.

மாற்றம்

மாற்றம்

பெங்களூர் அணியில் இன்று படிக்கல் இடம்பெறவில்லை. இவர் கொரோனாவில் இருந்து இப்போதுதான் குணமடைந்துள்ளார். இவருக்கு பதிலாக இன்னொரு இளம் இந்திய வீரர் ரஜத் படிடார் களமிறங்குகினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

பெங்களூர் அணியில் இன்று விராட் கோலி, ராஜத் படித்தார், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின், வாஷிங்டன் சுந்தர், கைலி ஜெமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சபாஷ் அகமது, சாகல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை

மும்பை

மும்பை அணியில் கிறிஸ் லைன், மார்கோ ஜென்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோஹித் சர்மா, கிறிஸ் லைன், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா, ராகுல் சாகர், மார்கோ ஜென்சன், பும்ரா, போல்ட் ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. அடுத்தடுத்து விக்கெட் இழந்தாலும் மும்பை அணி சிறப்பாக பேட்டிங் செய்தது.. முதல் 10 ஓவரிலேயே மும்பை அணி சிறப்பாக ஆடி 90+ ரன்களை எடுத்தது. ஆனால் அடுத்த 10 ஓவரில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி திணறியது.

பெங்களூர்

பெங்களூர்

கடைசியில் பெங்களூர் அணி நல்ல கம்பேக் கொடுத்தது. அதிலும் டெத் ஓவரில் வெறும் 36 ரன்களை மட்டுமே மும்பை அணி எடுத்தது. கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட் விழுந்தது. கடைசி ஓவரில் ரன் அவுட் போக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட் எடுத்தார். இதனால் 180-190 ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் மும்பை அணி வெறும் 159 ரன்கள் எடுத்து சுருண்டது.

பெங்களூர்

பெங்களூர்

இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து சுந்தர், படித்தார் விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதிரடியாக ஆடிய கோலி - மேக்ஸ்வெல் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களின் இணையே பெங்களூர் அணியை வெற்றிபெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி 33 ரன்களுக்கும், அதன்பின் மேக்ஸ்வெல் 39 ரன்களுக்கும் அவுட் ஆனார்.

ஏபிடி

ஏபிடி

சிறப்பாக பவுலிங் செய்த இளம் வீரர் ஜென்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் கடைசியில் அதிரடி காட்டிய ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டார். வெறும் 27 பந்துகளில் ஏபிடி வில்லியர்ஸ் 48 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பெங்களூர் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து மும்பை அணியை முதல் ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியது.

Story first published: Saturday, April 10, 2021, 8:10 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+