Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 முக்கிய மாற்றங்கள்..சொதப்பல் வீரருக்கு மீண்டும் வாய்ப்பு..ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் எடுத்த ரிஸ்க்

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 26வது லீக் ஆட்டத்த்தில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியது.

பஞ்சாப்

பஞ்சாப்

இந்த சீசனில் 6 போட்டிகளில் ஆடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்காக அணியில் 3 மாற்றங்களை அந்த அணி செய்துள்ளது. ஹென்ரிக்யூஸ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே போல மயங்க் அகர்வாலுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரும் நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பதிலாக ரைலே மெரிடித், பிரப்சிம்ரன் சிங், ஹர்ப்ரீட் பிரார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

தொடக்கத்தில் கெயில், கே.எல்.ராகுல் சிறப்பாக ரன் சேர்த்தாலும், மிடில் ஆர்டரில் நிகோலஸ் பூரன் சொதப்பி வந்தார். இந்த போட்டியில் இவருக்கு பதிலாக உலகின் நம்.1 வீரராக இருக்கும் டேவிட் மாலனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பூரணுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பஞ்சாப் அணி ரிஸ்க் எடுத்துள்ளது

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரண், பிரப்சிம்ரன் சிங், ஷாருக்கான், கிறிஸ் ஜோர்டன், ஹர்ப்ரீத் பிரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ரைலே மெரிடீத்

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி பெற்று பெங்களூரு அணி அசுர பலத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த போட்டியில் ஒரே ஒரு மாற்றத்தை செய்துள்ளது. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சபாஷ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

விராட் கோலி, தேவ்தத் பட்டிக்கல், ராஜட் பட்டிடார், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், சபாஷ் அகமது, டேனியல் சாம்ஸ், கெயில் ஜேமிசன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுவேந்திர சஹால்

Story first published: Friday, April 30, 2021, 20:10 [IST]
Other articles published on Apr 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+