Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி-க்கு இருந்த பிரம்மாஸ்திரம்.. பிடிங்கி எறிந்த பிசிசிஐ..ஆட்ட நேரம் மாற்றப்பட்டதற்கு உண்மை காரணம்

மும்பை: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டிகளை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பின்னால் உள்ள உண்மை காரணம் ஆர்சிபி தான் என தெரியவந்துள்ளது.

14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2ம் பகுதியில் சில அணிகள் திடீர் எழுச்சி பெற்றுள்ளதால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றுகள்

ப்ளே ஆஃப் சுற்றுகள்

இந்நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதில் எந்த ஒரு அணிக்கும் கூடுதல் பலன் இருக்கக்கூடாது என்பதற்காக நேற்று பிசிசிஐ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது தற்போது நடைபெற்று வரும் லீக் ஆட்டங்கள் அனைத்தும் வரும் அக்டோபர் 8ம் தேதியோடு முடிவடைகிறது. கடைசி நாளான அன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

போட்டி நேரங்கள் மாற்றம்

போட்டி நேரங்கள் மாற்றம்

அன்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவிருந்தது. அதே போல அன்றைய தினத்தில் இரவு 7 மணிக்கு பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்கவிருந்தது. இந்த இரண்டு போட்டிகளும் தான் தற்போது ஒரே நேரத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Recommended Video

கடைசி லீக் போட்டியில் மாற்றங்களை கொண்டுவந்த BCCI.. இதான் காரணமாம்
என்ன காரணம்

என்ன காரணம்

இந்த திடீர் மாற்றத்திற்கு புள்ளிப்பட்டியல் கணக்குகள் தான் காரணம். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு வெற்றி தோல்விகளை தாண்டி, நெட் ரன் ரேட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கடைசி போட்டியில் விளையாடும் அணி, முந்தைய போட்டியின் முடிவை அறிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டுவிடும். எனவே அப்படிபட்ட கூடுதல் பலனை அடையாமல் இருப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 ஆர்சிபிக்கு ஆப்பு

ஆர்சிபிக்கு ஆப்பு

அதாவது, அக்டோபர் 8ம் தேதியன்று மாலை ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டெல்லி அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் மிக நெருக்கமான ரன் ரேட் வித்தியாசத்துடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. ஒரு வேளை அக்டோபர் 8ம் தேதி மதியம் நடைபெறவிருந்த போட்டியின் முடிவுகளின் படி, ஆர்சிபி அணிக்கு கூடுதலாக ரன் ரேட் மட்டும் தேவைப்படலாம். அப்படி ரன் தேவைப்படும் போது, அந்த அணி வெற்றி, தோல்விகளை கண்டுக்கொள்ளாது. டெல்லி அணியை முடிந்தவரை குறைந்த ஓவருக்குள் சுருட்ட நினைப்பதற்கே அதிகம் முயற்சிக்கும். அப்போது ரன் ரேட் கூடி, சுலபமாக புள்ளிப்பட்டியலில் முன்னேறி ப்ளே ஆஃப்-க்கு செல்லும். இது ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால் தான் பிசிசிஐ இந்த முடிவினை எடுத்துள்ளது.

Story first published: Wednesday, September 29, 2021, 11:02 [IST]
Other articles published on Sep 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+