Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவறான தோனியின் கணக்கு.. அடுத்தடுத்து சரிந்து சிஎஸ்கே விக்கெட்கள்.. காரணம் என்ன?

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி படு மோசமாக சொதப்பி வருகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தது.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 5வது பந்திலேயே ஓப்பனிங் வீரர் பாஃப் டூப்ளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மொயின் அலி அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக இருந்தார். முதல் 3 பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். ஆனால் 4வது பந்தில் அவசரப்பட்டு பவுண்டரி அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

2 டக் அவுட்கள்

2 டக் அவுட்கள்

முதல் 2 ஓவர்களில் 2 டக் அவுட்களை சிஎஸ்கே அணி சந்தித்திருந்ததால், நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா தூக்கி நிறுத்துவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல வந்தவுடனேயே பவுண்டரியும் அடித்து அசத்தினார். ஆனால் அது கொஞ்சம் நீண்ட நேரம் கூட நீடிக்கவில்லை. ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற ரெய்னா 4 ரன்களுக்கு கேட்ச்சானார்.

4 முக்கிய விக்கெட்கள்

4 முக்கிய விக்கெட்கள்

இக்கட்டான சூழலில் சிக்கியிருந்த அணியை மீட்க நேரடியாக கேப்டன் தோனியே 3வது விக்கெட்டிற்கு களமிறங்கியது. வழக்கமாக 7வது வீரராக களமிறங்கும் தோனி இந்த முறை முன்கூட்டியே இறங்கியது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால் தோனியிம் ஏமாற்றத்தையே கொடுத்தார். ஆடம் மில்ன் வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆடிய அவர் 3 ரன்களுக்கு கேட்ச் அவுட்டானார். தோனியின் ஷாட் டைமிங் மற்றும் லெந்த் சரியாக இருந்த போதும், மும்பை அணியின் ஃபீல்டிங் அவரை சுருட்டியது.

பிட்ச்-ன் நிலைமை

பிட்ச்-ன் நிலைமை

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதுவும் 4 முக்கிய வீரர்கள் ஆகும். போட்டி நடைபெறும் துபாய் பிட்ச்சானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக விளங்கி வருகிறது. அதுவும் குறிப்பாக பந்து மிக மெதுவாக நின்று வருவதால், பேட்ஸ்மேன்கள் எவ்வளவு பவர் கொடுத்து அடித்தாலும் கேட்சாக மாறுகிறது. எனவே இனி வரும் பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிப்பதை குறைத்துவிட்டு பவுண்டரிகளுக்கு முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 19, 2021, 20:31 [IST]
Other articles published on Sep 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+