Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருந்த நம்பிக்கையும் போச்சு அதிரடி வீரருக்கான காத்திருப்பு வீணானது..ராஜஸ்தான் அணிக்கு இடி மேல் இடி

சென்னை: நடப்பு தொடரில் மீண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்க வீரரை களமிறக்க திட்டமிட்ட ராஜஸ்தான் அணியின் முயற்சி தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஏற்கனவே ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகிய நிலையில் ஸ்டோக்ஸும் விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களின் விலகலால் ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

பென் ஸ்டோக்ஸ் காயம்

பென் ஸ்டோக்ஸ் காயம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த பென் ஸ்டோக்ஸுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை மிகவும் பெரிதாக இருப்பதால், அவர் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.

தென்னாப்பிரிக்க வீரர்

தென்னாப்பிரிக்க வீரர்

ஸ்டோக்ஸுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ராஸி வான் டெர் டுசெனை அணியில் எடுக்க ராஜஸ்தான் அணி அழைப்பு விடுத்தது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதாகவும், வான் டெர் டுசென் ஒப்புக்கொண்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வி

தோல்வி

இந்நிலையில் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. ராஸி வான் டெர் டுசென் ஐபிஎல் தொடரில் விளையாட இன்னும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறவில்லை, எனக்கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் அவருக்கு விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ராஜஸ்தான் அணியில் சேருவதில் சந்தேகம் தான்.

ஃபுல் ஃபார்ம்

ஃபுல் ஃபார்ம்

டுசென் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 2 ஒருநாள் போட்டிகளில் 183 ரன்களை குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். அதே போல 2 டி20 போட்டிகளில் ஆடி 183 ரன்களை விளாசியுள்ளார். இதனால் டி20 போட்டியில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 153.57 என சிறப்பாக உள்ளது. ஆனால் அவருக்கு சமீப காலமாக காய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் தொடரில் கடைசி ஒரு நாள் போட்டியிலும், முதல் 2 டி20 போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 3, 2021, 12:06 [IST]
Other articles published on May 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+