Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடியாதுன்னா சொல்லிடுங்க.. விசாரணையை தொடங்கும் பாண்டிங்.. பண்ட்டிற்கு விரிக்கப்படும் வலை.. ஏன்?

சென்னை: நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்டன் பண்ட் எடுத்த சில முடிவுகளை அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விசாரிக்க இருக்கிறார்.

Recommended Video

நல்லா Bowling செய்தும் Ashwin-ஐ நம்பாத Rishabh Pant ? ஏன் ?

டெல்லி வீரர் அஸ்வினுக்கு நேற்று பண்ட் ஓவர் கொடுக்காதது பெரிய சர்ச்சையானது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கும் இதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

அஸ்வினுக்கு 4வது ஓவர் கோட்டாவை கொடுக்காதது தவறு என்று நேற்று ரிக்கி பாண்டிங்கே ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இதில் ரிக்கி பாண்டிங் குறித்த சில கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல்கள்

தகவல்கள்

அதன்படி களத்தில் பண்ட் எடுக்கும் முடிவுகளை ரிக்கி பாண்டிங் விசாரிக்க இருக்கிறாராம். ரிக்கி பாண்டிங் கொடுக்கும் சில ஆலோசனைகளை பண்ட் கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக பீல்டிங் செட்டப்பில் பண்ட் யார் பேச்சையும் கேட்பதில்லை.

பீல்டிங்

பீல்டிங்

நேற்று ஓவர் ரொட்டேஷனிலும் பண்ட் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து இருக்கிறார். சில இடங்களில் பண்ட் எடுத்து முடிவுகள் அந்த அன்னிக்கே எதிராக திரும்பியது. முதல் முறை கேப்டனாக இந்த தொடரில் களமிறங்கி உள்ள பண்ட் நேற்று சில தவறுகளை செய்தார்.

தவறுகள்

தவறுகள்

இதனால் பண்ட் எடுக்கும் முடிவுகள் குறித்து ரிக்கி பாண்டிங் விசாரிக்க உள்ளார். ஏன் பண்ட் முடிவுகளை மாற்றுகிறார். ஏன் மூத்த வீரர்களிடம் ஆலோசனை கேட்பது இல்லை என்று பாண்டிங் விசாரிக்க உள்ளார்.

கோபம்

கோபம்

நேற்று போட்டிக்கு பின் பாண்டிங் மிகவும் கோபமாக காணப்பட்டார். முக்கியமாக கடைசி ஓவரை டாம் கரனுக்கு கொடுத்ததை பாண்டிங் விரும்பவில்லை. பண்ட் புதிய கேப்டன் என்பதால் அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்கும் முடிவில் பாண்டிங் இருக்கிறார்.

Story first published: Friday, April 16, 2021, 14:44 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+