Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனசே உடைந்துவிட்டார்.. போட்டிக்கு பின் கெட்டவார்த்தையில் திட்டிய இளம் வீரர்.. பாவம் சஞ்சு சாம்சன்!

மும்பை: நேற்று பஞ்சாப் vs ராஜஸ்தான் போட்டிக்கு பின் ரியான் பராக் கெட்ட வார்த்தையில் டிவிட் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்று ராஜஸ்தான் வெற்றிக்காக சஞ்சு சாம்சன் தனியாளாக போராடினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திவாதியா நேற்று பெரிதாக மேஜிக் எதையும் நிகழ்த்தாமல் அவுட் ஆனார்.

அவுட்

அவுட்

சஞ்சு சாம்சனுக்கு பெரிய அளவில் யாரும் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. இதுவும் கூட ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. முக்கியமாக ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் அதிரடியாக ஆடி வந்த நிலையில், பவுன்சர் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ரியான்

ரியான்

11 பந்தில் 3 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 25 ரன்கள் எடுத்து ரியான் பராக் அதிரடியாக ஆடினார். கண்டிப்பாக சஞ்சு சாம்சன் உடன் சேர்ந்து மேட்சை முடித்துவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் ஷமி போட்ட ஸ்லோ பால் பவுன்சரில், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரியான் பராக் அவுட் ஆனார்.

மோசம்

மோசம்

நேற்று ரியான் ஆடி இருந்தால் கண்டிப்பாக ராஜஸ்தான் வென்று இருக்கும். இந்த நிலையில் சஞ்சுவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாத வருத்தத்தை நேற்று ரியான் டிவிட்டரில் வெளிப்படுத்தினார். கோபமாக ரியான் பராக் டிவிட் செய்து வருத்தப்பட்டார். தன்னை தானே திட்டிக்கொண்டார்.

நான் மோசமானவன்

நான் மோசமானவன்

நான் மோசமானவன் என்று பொருள்படும் வகையில் கெட்ட வார்த்தை ஒன்றை பயன்படுத்தி ரியான் பராக் டிவிட் செய்தார். அதன்பின் ரசிகர்கள் பலர்.. நீங்க நல்லாத்தான் ஆடுனீங்க.. இப்படி உங்களை நீங்களே திட்ட வேண்டாம்.. கூல் ப்ரோ என்று அறிவுரை வழங்கி பாராட்டினார்.

நீக்கம்

நீக்கம்

சஞ்சுவுடன் சேர்ந்து ஆடவில்லையே, அவருக்கு ஒத்துழைக்கவில்லையே.. பாவம் சஞ்சு தனியாக ஆடினாரே என்ற வருத்தத்தில் ரியான் பராக் இப்படி டிவிட் செய்தார். அதன்பின் ரசிகர்கள் பலரும் ரியானுக்கு ஆதரவாக பேசிய நிலையில், ரியான் தான் செய்த கெட்ட வார்த்தை டிவிட்டை நீக்கினார்.

Story first published: Tuesday, April 13, 2021, 18:10 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+