இப்படி பவுலிங் போடாதீங்க.. கெயிலையே குழப்பிய இளம் வீரர்.. அடுத்த பாலே அவுட்.. அம்பயர் பரபர வார்னிங்!
மும்பை: பஞ்சாப்பிற்கு எதிராக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் இன்று பவுலிங் செய்த விதம் பெரிய அளவில் சர்ச்சையானது.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட பஞ்சாப் அணி ஓவருக்கு 9 ரன்கள் அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறது.
இதில் சிறப்பாக பவுலிங் செய்த சக்காரியா தன்னுடைய அறிமுக போட்டியிலேயே விக்கெட் எடுத்தார். சஞ்சு சாம்சனும் இதுவரை ராஜஸ்தான் அணிக்காக நன்றாகவே கேப்டன்சி செய்துள்ளார்.

கெயில்
இந்த போட்டியில் இன்று பஞ்சாப்பிற்காக கெயில் தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் போக போக வேகம் எடுத்தார். முக்கியமாக பாஸ்ட் பவுலர்கள் ஓவர்களில் கெயில் வேகம் எடுத்தார். 6 ஓவர்களுக்கு பின் கெயில் வேகம் எடுத்து அடிக்க தொடங்கினார். கெயில் 27 பந்தில் 39 ரன்கள் எடுத்து 4 பவுண்டரி 2 சிக்ஸ் என்று களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான்
அப்போது ராஜஸ்தான் சார்பாக ரியான் பராக் பவுலிங் செய்ய வந்தார். அந்த பந்தை ரியான் ஷோல்டரை சுற்றி போடாமல் கிடைமட்டமாக வீசினார். கையை கிடைமட்டமாக, பவுலிங் போட தெரியாத வீரர் வீசுவது போல வீசினார். இவரின் பவுலிங் பார்த்து ஒரு நொடி கெயில் குழம்பி போனார்.

ரியான்
இதை பார்த்து நடுவர் ரியானிடம் வார்னிங் கொடுத்தார். இப்படி பவுலிங் போட கூடாது. கையை முழுமையாக சுற்றி வீசுங்கள் என்று வார்னிங் கொடுத்தார். அந்த பந்தில் கெயில் சிங்கிள் எடுத்தார். பின் மீண்டும் ராகுல் சிங்கிள் எடுக்க, மீண்டும் ரியான் ஓவரில் கெயில் ஸ்டிரைக் எடுத்தார்.

ஸ்பின்
அந்த பந்தில் ரியான் சாதாரணமாக ஆப் ஸ்பின் வீசினார். இதை கணிக்க தவறிய கெயில் நேராக ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இளம் வீரர் ரியான் ஓவரில் கெயில் இப்படி அவுட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ரியானின் பவுலிங் ஸ்டைலும் விவாதத்தை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications