Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம்.. இனி அவருக்கு வாய்ப்பே கிடைக்காது.. சிஎஸ்கே வீரருக்கு ஒரே போட்டியில் செக்.. கதை முடிந்தது!

மும்பை: சிஎஸ்கே அணியில் எல்லா வீரர்களும் பார்மிற்கு திரும்பி உள்ள இனி புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் ஆகியுள்ளது.

Recommended Video

IPL 2021: சிறப்பா பவுலிங் செய்த Lungi Ngidi CSK -வின் அந்த ஒரு கவலையும் தீர்ந்தது

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. பேட்டிங்கில் அதிரடி காட்டிய சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அதிரடியாக ஆடி 220 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

எப்படி

எப்படி

சிஎஸ்கே அணியில் ஆடிய ரூத்துராஜ் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். முதல் மூன்று போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை. முதல் மூன்று போட்டிகளில் இவர் மொத்தமாக 15 ரன்கள் எடுத்தார். ஆனாலும் இவருக்கு நேற்று போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர் மீது நம்பிக்கை வைத்து நேற்று மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான்காவதாக வழங்கப்பட்ட வாய்ப்பை நேற்று ரூத்துராஜ் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். வெறும் 42 பந்துகள் பிடித்து 64 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடக்கம்.

இனி சான்ஸ் கிடைக்காது

இனி சான்ஸ் கிடைக்காது

ஓப்பனிங் வீரர்கள் இரண்டு பேரும் தற்போது பார்மிற்கு திரும்பி உள்ளனர். டு பிளசிஸ்மூன்று போட்டிகளாக நன்றாக ஆடி வருகிறார். இன்னொரு பக்கம் ரூத்துராஜ் பார்மிற்கு திரும்பி உள்ளார். இதனால் இனி உத்தப்பா சிஎஸ்கேவில் வாய்ப்பு பெறுவது சிக்கலாகி உள்ளது.

உத்தப்பா

உத்தப்பா

ரூத்துராஜ் சரியாக ஆடாத போதே உத்தப்பாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ரூத்துராஜ் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளதால் கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். பொதுவாக தோனி பிளேயிங் லெவனை மாற்றுவதை விரும்ப மாட்டார்

தோனி

தோனி

தோனி எப்போதும் அதே அணியுடன் ஆட நினைப்பார். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் உத்தப்பா இனி இடம்பெற வாய்ப்பே இல்லை. இவர் மட்டுமின்றி கிரிஷ்ணப்பா கவுதம் போன்ற வீரர்களும் சிஎஸ்கே அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பு பெறுவது கஷ்டம் ஆகியுள்ளது.

Story first published: Thursday, April 22, 2021, 12:01 [IST]
Other articles published on Apr 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+