
கேரளா
இன்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேரளா அணி மிகவும் சிறப்பாக ஆடியது. இதில் கேரளாவிற்கு எதிராக ஆடிய பீகார் அணி 148 ரன்களை 40 ஓவரில் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை சேஸ் செய்த கேரளா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது.

வெற்றி
அதன்படி வெறும் 8.5 ஓவரில் கேரளா அணி 149 ரன்கள் எடுத்து பீகாரை வீழ்த்தியது. கேரளா சார்பாக களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 32 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். இவர் இன்று மட்டும் 10 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்தார்.

அதிரடி
இந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தொடர்ந்து ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி வருகிறார். இரண்டு சதம், ஒரு 80+ என்று கலக்கிய ராபின் உத்தப்பா இன்றும் 87 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருக்கிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் உத்தப்பா 375 ரன்கள் எடுத்துள்ளார்.

உத்தப்பா
இந்த சீசனில் உத்தப்பாதான் அதிக ரன் எடுத்த வீரர். இவரை சிஎஸ்கே அணியில் எடுத்த போது அது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் தன்னுடைய சிறப்பான ஆட்டம் மூலம் சிஎஸ்கே அணிக்கு இவர் பெரிய நம்பிக்கை அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications