"மாத்திக்கோங்க".. வெற்றிக்கு பின்பும்.. கோபமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற ரோஹித் சர்மா.. விளாசல்!
சென்னை: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் கோபமாக காணப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
நேற்று ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட போட்டியில் மும்பை ஷாக் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவருக்கு 150/5 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

ஹைதராபாத்
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றிபெற்று இருந்தாலும், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா அவ்வளவு சந்தோசமாக இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நேற்று ரோஹித் சர்மா கோபமாக அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. சில பேட்ஸ்மேன்களை தனியாக கூப்பிட்டும் பேசி உள்ளார்.

மிடில் ஆர்டர்
அதன்படி மும்பையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷான், இரண்டு போட்டியாக சரியாக ஆடாத டி காக், ஹர்திக் பாண்டியா ஆகியோரை தனியாக அழைத்து ரோஹித் சர்மா அறிவுரை வழங்கி உள்ளார். இவர்களின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கூறி, ரோஹித் சர்மா கொஞ்சம் கோபமாக விமர்சித்து இருக்கிறார்.

போல்ட்
அதோடு இன்னொரு பக்கம் போல்ட் ஆட்டம் குறித்தும் விமர்சனம் வைத்துள்ளார். பவர் பிளேவில் போல்ட் சரியாக ஆடவில்லை. பவர் பிளேவில் இவரின் பவுலிங் மோசமாக இருந்தது. பீல்டிங்கும் மோசமாக இருந்தது. இதனால் இவரையும் தனியாக அழைத்து ரோஹித் சர்மா அறிவுரை வழங்கி உள்ளார்.

வெற்றி
நாம் வென்றுவிட்டோம். ஆனால் அணி இன்னும் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சின்ன சின்ன தவறுகளை இனி வரும் போட்டிகளில் செய்யாமல் நாம் கட்டுப்பாட்டுடன் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா விமர்சனம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications