
அதிரடி
இன்று நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி வந்தார். முதல் ஓவரில் பொறுமையாக ஆடினாலும் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்தார். அதிலும் சாஹல் ஓவரில் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார்.

சிக்ஸ்
அதிலும் சாஹல் ஓவரில் ரோஹித் அடித்த சிக்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஆனால் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா தேவையின்றி ரன் அவுட் ஆனார். கவர் திசையில் கிறிஸ் லின் அடித்துவிட்டு ஓட முயன்றார். ரோஹித்தை பார்த்து வேகமாக ஓடி வாருங்கள் என்று கூறினார்.

நம்பிக்கை
கிறிஸ் லின்னை நம்பி ரோஹித் சர்மா வேகமாக ஓடினார். ஆனால் பாதி தூரம் ஓடிய பின் கிறிஸ் லின் திரும்பி சென்றார். ரன் அவுட் ஆகிவிடுவோம் என்று தெரிந்ததும் கிறிஸ் லின் திரும்பி சென்றார். இதை எதிர்பார்க்காத ரோஹித், ஓடும் போதே அதிர்ச்சி அடைந்தார்.

அவுட்
ஆனால் ரோஹித் திரும்பி கிரீஸுக்கு செல்லும் முன் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார். கிறிஸ் லின் இப்படி ஏமாற்றியதை பார்த்து ரோஹித் கடும் கோபம் அடைந்தார். பேட்டை கோபத்தில் விளாசி, கத்தியபடியே நடந்து சென்றார்.

முதல் போட்டி
முதல் போட்டியில் அதிரடியாக ஆடி ரன் எடுக்கலாம் என்று ரோஹித் நினைத்தார். ஆனால் கிறிஸ் லின் செய்த காரியத்தால் ரோஹித் ரன் அவுட் ஆனார். இந்த நிலையில் கிறிஸ் லின் செய்தது தவறு, அவர் பாதி பிட்சில் திரும்பி சென்று இருக்க கூடாது என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











