Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சு.. 16 கோடி கொடுத்து எடுத்தது இதுக்குதானா? மூத்த வீரரை எடுத்து ஏமாந்த ராஜஸ்தான் டீம்.. தேவையா?

மும்பை: ராஜஸ்தான் அணியில் நேற்று ஆடிய கிறிஸ் மோரிஸ் பெரிய அளவில் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தாதது அதிர்ச்சி அளித்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் 2021 தொடரில் ஆடி வரும் முக்கியமான வீரர் கிறிஸ் மோரிஸ். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுக்க பல்வேறு லீக் போட்டிகளில் ஆடி வருகிறார்.

ஐபிஎல் தொடரிலும் கூட சென்னை, டெல்லி, பெங்களூர் போன்ற அணிகளில் கிறிஸ் மோரிஸ் ஆடி இருக்கிறார். இந்த வருடம் ராஜஸ்தான் அணியால் இவர் எடுக்கப்பட்டார்.

கிறிஸ் மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்

2021 ஏலத்தில் பல்வேறு அணிகளிடம் போட்டியிட்டு கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் அணி எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய் கொடுத்து இவர் எடுக்கப்பட்டார். டெல்லி, பஞ்சாப், பெங்களூர் என்று பல்வேறு அணிகள் போட்டியிட கடையில் ராஜஸ்தான் அணி இவரை ஏலம் எடுத்தது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ஆனால் ராஜஸ்தான் அணி இவ்வளவு ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தும் கூட கிறிஸ் மோரிஸ் நேற்றைய போட்டியில் பெரிதாக ஆடவில்லை. நேற்று இவர் போட்ட முதல் இரண்டு ஓவர்கள் மிக மோசமாக இருந்தது. சரியான லைன் மற்றும் லேன்தில் போட முடியவில்லை. முக்கியமாக வெரைட்டி இல்லாமல் பவுலிங் செய்தார்.

இரண்டு ஓவர்

இரண்டு ஓவர்

இவரின் முதல் இரண்டு ஓவரில் கே . எல் ராகுல், தீபக் ஹூடா இரண்டு பேருமே அதிரடியாக ஆடினார். சிக்ஸ், பவுண்டரி என்று அடுத்தடுத்து கொடுத்து மோரிஸ் அதிர்ச்சி அளித்தார். சரியாக யார்க்கர் கூட போட முடியாமல் இவர் நேற்று திணறியது பெரிய அதிர்ச்சி அளித்தது. நேற்று இவர் இரண்டு விக்கெட் எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

ஆனால் அதில் ஒரு விக்கெட் டெயில் என்டர் விக்கெட். 4 ஓவரில் 41 ரன்கள் கொடுத்தார். இவரை ஆல் ரவுண்டர் என்று நம்பி ராஜஸ்தான் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால் அதற்கான எந்த தடயமும் நேற்று இவரிடம் இல்லை.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

மோசமான பவுலிங் இவரின் பீல்டிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதோடு இவர் நேற்று 4 பந்துகள் பிடித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பந்தில் பவுண்டரி அடித்து இருந்தால் கூட ராஜஸ்தான் வென்று இருக்கும். இவ்வளவு கோடிகளை கொட்டிகொடுத்து இவரை ஏன் எடுத்தோம் என்று ராஜஸ்தான் புலம்பும் அளவிற்கு கிறிஸ் மோரிஸ் ஆட்டம் நேற்று இருந்தது.

Story first published: Tuesday, April 13, 2021, 14:35 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+