Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது கிரிக்கெட்.. இப்படித்தான் நடக்கும்.. ஷாருக்கானுக்கு பதிலடி கொடுத்த ரசல்.. காரசார விவாதம்!

சென்னை: கொல்கத்தா அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கானுக்கு மூத்த வீரர் ரசல் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பைக்கு எதிரான போட்டியில் நேற்று கொல்கத்தா தோல்வி அடைந்ததை அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷாருக்கான், கொல்கத்தா அணியின் ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. அட்லீஸ்ட் கொல்கத்தா அணி சார்பாக அதன் ரசிகர்களிடம் இந்த தோல்விக்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று மிகவும் வருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

ரசல்

ரசல்

இந்த நிலையில் ஷாருக்கானின் இந்த கருத்துக்கு தற்போது ரசல் அதிரடியாக பதில் அளித்துள்ளார். அதில், ஷாருக்கானின் அந்த டிவிட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால் என்ன நடந்தாலும் இது கிரிக்கெட்.. அது முடியும் வரை யார் வெற்றிபெறுவார்கள், ஆட்டம் எப்படி முடியும் என்றெல்லாம் கணிக்கவே முடியாது. நாங்கள் நன்றாகவே ஆடினோம்.

பதிலடி

பதிலடி

எங்கள் ஆட்டம் நன்றாகவே இருந்ததாக நம்புகிறேன். சக வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இது இரண்டாவது மேட்ச்தான். விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்களுக்கு இந்த போட்டி நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.

நிறைய போட்டி

நிறைய போட்டி

நான் நிறைய டி 20 போட்டிகளை ஆடி இருக்கிறேன். பல போட்டிகள் இப்படி கடைசி கட்டத்தில் மாறி இருக்கிறது. அதேபோல்தான் இந்த போட்டியும் மாறி உள்ளார். இது கிரிக்கெட்.. கிரிக்கெட் என்றால் இப்படித்தான் நடக்கும். இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் நன்றாக ஆடுவோம் என்று ரசல் பதில் அளித்துள்ளார்.

ரசல் ஓனர்

ரசல் ஓனர்

கொல்கத்தா அணியின் ஓனருக்கே ரசல் இப்படி பதில் கொடுத்து இருப்பது வைரலாகி உள்ளது. ஷாருக்கனை ரசல் திட்டவில்லை, விமர்சிக்கவில்லை என்றாலும், அணியின் உரிமையாளருக்கே பதில் கொடுத்துள்ளார். கடந்த வருடமே ரசல் மீது ஷாருக்கான் அதிருப்தியில் இருந்த நிலையில் இந்த வருடம் ரசல் நேரடியாக ஷாருக்கானை லைட்டாக சீண்டி உள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 13:25 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+