For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவிஸ்ட்.. மீண்டும் டீமுக்கு வாங்க.. ஏபிடிக்கு மெசேஜ் அனுப்பிய தென்னாப்பிரிக்கா.. சுவாரசிய பின்னணி

சென்னை: ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்கு திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.

Recommended Video

Ab De Villiers மீண்டும் South Africa அணிக்கு திரும்பலாம்.. Message அனுப்பிய Mark Boucher

கடந்த 2018 மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

2019 உலகக் கோப்பையின் போது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்ப முயன்றார். ஆனால் அப்போது அணி நிர்வாகம் இவரின் கோரிக்கையை ஏற்கவில்லை.

அழைப்பு

அழைப்பு

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தற்போது டி வில்லியர்ஸ் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், ஏபிடி இப்போதும் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் சர்வதேச லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரிடமே இதை பற்றி மெசேஜ் செய்து குறிப்பிட்டேன்.

சிறப்பு

சிறப்பு

நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள். ஐபிஎல்லில் நீங்கள் எப்போதும் போல ஆடுங்கள் என்று மெசேஜ் செய்தேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாக இப்படி குறிப்பிட்டேன். ஐபிஎல் தொடர் முடிந்ததும் அவரின் ஆட்டம் குறித்து பேசுவேன்.

மெசேஜ்

மெசேஜ்

அவருக்கு மீண்டும் மெசேஜ் செய்வேன். அணியில் அவருக்கான இடம் இன்னும் திறந்தே இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அவர் இப்போது சிறப்பாக ஆடலாம். அவரின் ஆட்டத்தை மீண்டும் தென்னாபிரிக்க அணியில் காண ஆவலோடு இருக்கிறேன்.

டி 20 அணி

டி 20 அணி

தென்னாப்பிரிக்க டி 20 அணியில் அவர் இணையலாம், அவரை வரவேற்க நாங்கள் தயார் என்று பயிற்சியாளர் மார்க் கூறியுள்ளார். இவரின் இந்த திடீர் அழைப்புக்கு பின், ஏபிடியின் சமீபத்திய பார்ம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

ஆர்சிபி

ஆர்சிபி

ஏபிடி ஆர்சிபி அணியில் சிறப்பாக ஆடி வருகிறார்.. முதல் ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக ஆர்சிபி வெல்ல ஏபிடிதான் காரணம். இதனால் டி 20 உலகக் கோப்பை தொடரில் இவரை தென்னாபிரிக்க அணியில் இறக்கலாம் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது.

Story first published: Friday, April 16, 2021, 12:20 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
IPL 2021: SA team management ready to Ab De Villiers back to the team for T20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+