Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க என்ன தோனியா?.. கொதிக்கும் டீம் மேனேஜ்மென்ட்.. தட்டி தூக்க ரெடி.. ஒரே போட்டியில் கதை முடிந்தது!

சென்னை: ஹைதராபாத் அணியில் ஆடும் இந்திய வீரர் ஒருவருக்கு இனி வரும் போட்டிகளில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று ஹைதராபாத் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டியில் கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் ஹைதராபாத் அணியில் இருக்கும் முக்கியமான சில வீரர்கள் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

தகவல்கள்

தகவல்கள்

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் வீரர் விர்த்திமான் சாகா அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று போட்டியில்தான் சாகாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் சரியாக ஆடவில்லை. பவர் பிளேவில் சரியான தொடக்கத்தை சாகா கொடுக்கவில்லை.

அவுட்

அவுட்

9 பந்துகள் குடித்துவிட்டு, பவர் பிளேவில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து சாகா அவுட் ஆனார். நேற்று ஹைதராபாத் தோல்வி அடைய இவர் முக்கிய காரணமாக இருந்தார். 2020ல் தோனி டொக் வைத்து ஆடியது போல ஆடினார்.

பிரைஸ்டோ

பிரைஸ்டோ

இவருக்காக ஓப்பனிங் இறங்க வேண்டிய பிரைஸ்டோவை நேற்று வார்னர் மிடில் ஆர்டரில் இறங்க வைத்தார். சாகாவின் இந்த மோசமான ஆட்டம் காரணமாக அவர் மீது அணி நிர்வாகம் கொதிப்பில் உள்ளது. அதிலும் இவரின் சமீபத்திய பார்ம் ஹைதராபாத் அணி நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

வயது

வயது

இவருக்கு வயதும் ஆகிவிட்டது, முதல் தர போட்டிகளிலும் இவர் சரியாக ஆடுவது இல்லை. தற்போது ஐபிஎல்லிலும் சொதப்புகிறார். இதனால் இவருக்கு ஹைதராபாத் அணியில் தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள்.

Story first published: Thursday, April 15, 2021, 16:20 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+