13 வருஷமா வாய் மட்டும்தான் பேசுது.. மோசம்.. கோலியை ஒரேயடியாக விமர்சித்த கம்பீர்.. கடும் மோதல்!
சென்னை: பெங்களூர் அணி எல்லா வருடமும் கோப்பையை வெல்வோம் என்று கூறிவிட்டு, கடைசியில் மோசமாக சொதப்பிவிடுகிறது என்று கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடரை பெங்களூர் அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது. வலுவான மும்பை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூர் அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக ஆடி வருகிறது. இதற்காக பல புதிய வீரர்கள் அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கம்பீர்
இந்த நிலையில் பெங்களூர் அணியை எப்போதும் விமர்சிக்கும் கவுதம் கம்பீர் இந்த முறையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெங்களூர் அணி குறித்தும், கோலி குறித்தும் பேசி உள்ள கம்பீர், பெங்களூர் அணியிடம் எப்போதும் நல்ல வீரர்கள் இருந்துள்ளனர். வலுவான படை இருந்திருக்கிறது.

விமர்சனம்
அவர்களிடம் பெரிய ஃபயர் பவர் இருந்துள்ளது. அவர்களிடம் பீட்டர்சன் தொடங்கி கெயில் வரை பலர் இருந்துள்ளனர். ஆனாலும் பெங்களூர் அணி கோப்பையை வென்றது இல்லை. பெங்களூர் அணி எப்போதும் பேசும்.

அணி எப்படி?
எங்களுடன் வலுவான அணி இருக்கிறது என்று பெங்களூர் அணி பெரிதாக பேசும். ஆனால் அவர்கள் செயலில் காட்டுவது இல்லை. பெங்களூர் அணி பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும். 13 வருடமாக பெங்களூர் அணி பேசிக்கொண்டே இருக்கிறது.

13 வருடம்
ஆனால் கோப்பையை வெல்வது இல்லை. இந்த முறை பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல் சேர்ந்து இருக்கிறார். கோலி, டி வில்லியர்ஸுக்கு இவர் கூடுதல் பலமாக இருப்பார். ஆனால் பெங்களூர் அணி இவரை எப்படி பயன்படுத்தும் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications